தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எலும்பு!

எலும்பு!

எலும்பு!


PUBLISHED ON : டிச 09, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்கள் எலும்புகள் கடினமானவை; வலிமையானவை. ஆனால், திடப்பொருள் அல்ல. அதனால் நீங்கள் நினைப்பது போல அவை கனமானதும் அல்ல. சரியாக சொல்லின் அவை நம் உடம்பின் எடையில் 14% மட்டுமே. எலும்புகள் தசைகளை விட லேசானவை. எலும்புகள் காய்ந்த, இறந்த பாகங்கள் அல்ல; வாழும் பாகங்கள். உடைந்தால் தன்னை தானே 'ரிப்பேர்' செய்து கொள்ளும் ஆற்றலும் எலும்பிற்கு உண்டு. மூட்டுகளால் இணைக்கப்பட்டு, எண்ணற்ற எலும்புகளின் கூட்டுடன் செயல்படுவதுதான் உங்கள் உடல். உங்களுக்கு காலில் மூட்டுகள் இல்லையெனில் ரோபோ போலோ, பேய் படங்களில் வரும் பேய் போலதான் நீங்கள் கால்களை மடக்க முடியாத இறுக்கமான நிலையில் நடக்க வேண்டியதிருக்கும்.

எலும்புக்குள்ளே என்ன இருக்கு?

எல்லா எலும்புகளின் வெளிப்புறமும் கடினமும், வலிமையும் கொண்டவை. ஆனால், எலும்பின் உட்புறம், 'ஸ்பாஞ்ச்' போல இருக்கும். இந்த உட்புறப்பகுதியில், 'ஸ்பாஞ்ச்' சதை குறுக்கு வெட்டுமுறையில் அமைந்திருக்கும். இது எலும்பை வலிமையாக்கும். ஆனால், எலும்பின் எடை அதிகமாக ஆகாது. இந்த அதிக எடை கூட்டாது வலிமைப்படுத்துதல் ஐடியா ஈபில் டவர் போன்ற கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டது.

குறுக்கு வெட்டு சதை, இந்த ஸ்பாஞ்ச் உட்புறம் கூடு போல தோற்றமளிக்கிறது.ரத்தநாளங்கள் ஆக்ஸிஜன் மற்றும் உணவை எலும்பு செல்களுக்கு எடுத்துச் செல்கிறது. சில எலும்புகளில் ஜெல்லி போன்ற கொழுப்பு பொருள் நிரம்பி இருக்கும். எலும்பின் கொழுப்பில் சிவப்பு ரத்த செல்கள் தயாரிக்கப்படுகிறது. உங்கள் கழுத்து ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தை விட சிறியது. ஆனால் அதற்கு இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கைதான் உங்களுக்கும். முதுகெலும்பின் முடிவில் இருக்கும் இந்த வால் எலும்பின் பெயர் காக்கிக்ஸ் இது முதுகெலும்பை பாதுகாக்கிறது. உங்கள் இரண்டு பாதங்களில் உங்கள் உடலில் நான்கில் ஒரு பகுதி எலும்புகள் இருக்கிறது.

பிறந்த குழந்தையின் எலும்புகள்!

புதிதாக பிறந்த குழந்தைகளின் எலும்புகள் மிருதுவானவை. அவர்களின் எலும்புகள் உறுதியான இறுக்கமான சவ்வுகளால் ஆனவை. அது முதலில் ரப்பர் பொருள் போல இருந்து பின், குழந்தை வளர வளர கடினப்படும். இதோ இந்த குழந்தையின் கைப்பகுதி எலும்புகளின் படத்தில் இறுக்கமான சவ்வு இடம்பெற்றது காட்டப் பட்டுள்ளது. குழந்தை வளர, வளர சவ்வு பகுதியில் எலும்பு வளர்ந்துவிடும். உங்கள் கையில் 27 சிறிய எலும்புகள் இருக்கும். எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் அந்த எலும்புகள் தசைகளும், தசைகள் எலும்போடும் பிணைக்கும் தசை நார்களாலும் இணைக்கப்படும். ஜிக்-சா புதிர் போல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும்.

எலும்பின் பணி!

உங்கள் உடலில் மூன்று வகையான எலும்புகள் உண்டு. காலில் இருக்கும் நீண்ட எலும்புகள். கை மற்றும் முதுகெலும்பில் உள்ள சிறிய எலும்புகள் தோள் மற்றும் மண்டை ஓட்டு எலும்புகள், தட்டையான எலும்புகளாகும். எலும்புகள் வெவ்வேறு விதமான முறையில் இணைக்கப்பட்டிருக்கும். எலும்புகளின் வெவ்வேறு விதமான அசைவிற்கு இந்த இணைப்பு உதவுகிறது.

பால் அண்ட் சாக்கெட் (பந்து மற்றும் குழிவு) மூட்டு, தோளில் இருக்கிறது. ஒரு எலும்பின் வட்ட வடிவ முனைப்பகுதி பொருந்துகிறது. அதனால்தான் உங்கள் தோள்பட்டையால் ஒரு வட்டம் போட கூட முடிகிறது.

உங்கள் கட்டை விரல் ஸ்பெஷலானது. இந்த மூட்டிணையும் கட்டை விரல் இருதிசையில் அசைக்க உதவுகிறது.

உங்கள் முட்டி, கை மூட்டை போலவே, காலை அசைக்க பயன்படுகிறது. ஒரு எலும்பின் முனைப்பகுதி மற்றொரு எலும்பின் வெற்றிடத்தில் அழகுற பொருந்துகிறது. இதுபோன்ற இணைப்பு ஒரு திசையில் மட்டும் அசைய உதவும்.

உங்கள் மூட்டு தொப்பி அல்லது பட்டீலா உங்கள் மூட்டை பாதுகாக்கிறது. உங்கள் பாதத்தில் இழைந்து நழுவி செல்லும் தட்டையான மூட்டுகள் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us