PUBLISHED ON : டிச 31, 2010

ஒரு ஜப்பானிய புத்தாண்டு !
ஜப்பானியர்கள் புத்தாண்டு அன்று சிறப்பான உணவுகளை உண்பர். ஜப்பானியர்களின் புத்தாண்டு ஸ்பெஷல் உணவு, 'ஓ-ஸீ-ச்சீ-ரீ-ஆர்-ஈ' என்பதாகும். உலோகப்பூச்சுடனான மரப் பெட்டிகளில் இவ்உணவு இருக்கும். மிக கவனமாய் முந்தைய தினமே தயாரிக்கப் பட்டுவிடும். இந்த பெட்டிகளில் நான்கு பிரிவுகள், வெவ்வேறு வகை உணவுகளுடன் இருக்கும். ஒவ்வொருவரும் புத்தாண்டிற்கு வாழ்த்து அட்டைகளை அனுப்புவர். அன்றைய தினம் நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவர். சாலை ஊர்வலங்கள், பார்ட்டிகள் மற்றும் பட்டாசு வெடித்தல் ஆகியவைகளை மக்கள் விரும்பி செய்வர். மூன் நூடுல்ஸ் சூப்பும் சாப்பிட்டு மகிழ்வர்.
ஸ்டிராபெர்ரி பெண்ணே ...
கடல் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஹோ பிங்ஹோ என்பவர் நேஷனல் தாய்வான் ஓஷன் யுனிவர்சிடியை சேந்தவர். இவர் தாய்வான் கடற்கரையில் ஸ்டிரா பெர்ரி நண்டை ஜனவரி 2010ம் ஆண்டு கண்டுபிடித்தார். இது ஹவாய், பாலிநேஷியா, மொரீஷியஸ் போன்ற தீவுகளில் காணப்படும் ஸ்டிரா பெர்ரி வகை நண்டுகளைப் போன்றே, பளிச் சிகப்புக் கலர் ஓட்டில் குட்டி குட்டி வெள்ளை பந்து போன்ற டிசைன் உள்ளது. பார்ப்பதற்கு ஸ்டிரா பெர்ரி பழம் போன்றே உள்ளது. இது எல்லாவித ஆகாரத்தையும் உட்கொள்ளும் என்றாலும் கடற்பாசியே இதன் விருப்ப உணவு. மற்ற ஸ்டிரா பெர்ரி நண்டுக்கும், தாய்வான் ஸ்டிரா பெர்ரி நண்டுக்கும் உள்ள வித்தியாசமே இதன் ஓடு மிகப் பெரிதாக இருப்பதுதான்.
