PUBLISHED ON : ஜன 18, 2013

அ நிறம் | அளவு
தந்தை பெரியாரிடம் ஒருவர், ''உங்கள் தலைமுடி வெள்ளையாக இருக்கிறது. தாடி மட்டும் கருப்பாக இருக்கிறதே! தாடிக்கு டை அடிக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
அதற்கு பெரியார், ''அதெல்லாம் இல்லை. தலைமுடி அண்ணன், மீசையும், தாடியும் தம்பிகள். அதனால்தான் தலைமுடி சீக்கிரம் நரைத்து விட்டது. தாடியும், மீசையும் நரைக்கவில்லை,'' என்றார்.
''அது எப்படி அண்ணன் தம்பிகள்... புரியவில்லையே?'' என்று அவர் கேட்டார்.
''பிறக்கும்போது கூடவே பிறக்குது தலைமுடி. மீசையும் தாடியும் பதினைந்து பதினாறு ஆண்டுகள் கழித்துதானே வருது. அதனால்தான் தலைமுடி அண்ணன்; மீசையும் தாடியும் தம்பிகள்,'' என்றார் தந்தைப் பெரியார்.
கேட்டவர் அசந்து போய் விட்டார்.
