PUBLISHED ON : டிச 18, 2021

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
மாங்காய் - 1
காய்ந்த மிளகாய் - 10
வெந்தயப் பொடி, மஞ்சள் துாள், பெருங்காயத்துாள், கடுகு, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
வாழைப்பூவை சுத்தம் செய்து, வேக வைத்து, நீரை வடிக்கவும். இதனுடன், துண்டாக்கிய மாங்காய், காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
கடாயில், எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்துாள், வெந்தயப் பொடி தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து கிளறி, கெட்டியானதும் இறக்கவும்.
சுவைமிக்க, 'வாழைப்பூ தொக்கு!' தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது!
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.
தொடர்புக்கு: 96771 72417
