PUBLISHED ON : டிச 19, 2014

இது, 'தேங்காய்பால் கேக்' செய்முறை நேரம்.
தேவையானவை: பால் 750 மில்லி, தேங்காய் ஒன்று, சர்க்கரை ஒன்றரை கிலோ, நெய் 50 கிராம், பாதாம் பருப்பு, முந்திரி தலா 20, வென்னிலா எசன்ஸ் 2 தேக்கரண்டி.
செய்முறை: முந்திரி, பாதாம்பருப்பை சிறிது நெய்யில் வறுத்து, நொறுக்கி வைக்கவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும். பாலை வாணலியில் ஊற்றி, பாதி அளவாகும் வரை காய்ச்சவும். அதில், தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்து கிளறவும். கெட்டிப்பதம் வந்ததும் எசன்ஸ், மீதி நெய் சேர்த்து கிளறுங்கள். கலவை நன்கு சுருண்டு வரும்போது இறக்கி, நெய் தடவி தாம்பாளத்தில் கொட்டி சமமாக பரப்பவும்.
அதன் மீது நொறுக்கிய பாதாம், முந்திரியை தூவி நன்கு அழுத்திவிடுங்கள். சற்று நேரம் கழித்து, துண்டு போட்டு சாப்பிடலாம்.
இந்தத் தேங்காய்ப்பால் கேக், வித்தியாசமானது. குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவர். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஒரே மாதிரி ஒரே சுவை கேக் வலம் வரும்போது இது போல வித்தியாசமான முயற்சி அனைவரையும் கவரும்.
