தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மேஜிக் செய்யலாமா? - ஓரம் போ மேஜிக்!

மேஜிக் செய்யலாமா? - ஓரம் போ மேஜிக்!

மேஜிக் செய்யலாமா? - ஓரம் போ மேஜிக்!


PUBLISHED ON : செப் 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த மேஜிக் செய்ய தீக்குச்சிகள் அல்லது சாதாரண குச்சிகள், சோப்பு, ஒரு நீண்ட குச்சி, வாயகன்ற ஒரு பாத்திரம் ஆகியவை தேவை.

செய்முறை:

முதலில் நீர் நிரம்பிய வாயகன்ற பாத்திரத்தில், தீக்குச்சிகளைக் கொட்டி விட வேண்டும். இப்போது சபையினர் முன், இந்தத் தண்ணீர் மேல் மிதக்கும் குச்சிகளை ஓரம் போகச் சொல்கிறேன் என்று ஒரு நீண்ட குச்சியின் முனையை தண்ணீரின் நடுவே வைத்து, 'ஓரம் போ' என்று சொல்லவும். உடனே, இந்தக் குச்சிகள் பாத்திரத்தின் ஓரமாகச் சென்று விடும்.

இந்த மேஜிக் செய்வது எப்படி?

நீங்கள் தண்ணீரில் வைத்த குச்சியின் முனையில், குளியல் சோப் கொஞ்சம் தடவி வைத்திருக்க வேண்டும். இது முன்னரே யாருக்கும் தெரியாமல் செய்து வைக்க வேண்டும். இந்தச் சோப் தண்ணீரில் பட்டவுடன் கரைந்து, மேற்பரப்பில் இழுவிசையை உண்டாக்கி, அந்த நீரின் மேற்பரப்பில் நிரம்பி விடுகிறது. அதனால்தான் குச்சிகள் விலகி ஓரமாகச் சென்று ஓட்டிக் கொள்ளும்.

சூப்பரா உங்க பிரண்ட்ஸ் முன்னாடி செஞ்சி அசத்துங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us