/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (22)
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (22)
PUBLISHED ON : ஆக 26, 2016

ஹாலோ... ஹவ் ஆர் யு ஸ்டூடண்ட்ஸ்?
பல மூத்த வாசகர்கள், பள்ளி ஆசிரியர்கள் என பலரும் இந்தப் பகுதியை விரும்பி படிக்கிறீங்க... ரொம்ப சந்தோஷம்...
Weak verb பட்டியல் கொடுத்தேனே... நல்லா படிச்சி மனப்பாடம் செய்துகிட்டீங்களா? சரி... இப்போ Simple pastல் Sentence அமைக்கலாமா?
1.She came yesterday
அவள் நேற்று வந்தாள்.
2.Priya passed the exam
ப்ரியா தேர்வில் வெற்றியடைந்தாள்.
3.Mother served food
அம்மா உணவு பரிமாறினாள்.
4.Lalitha invited me to the wedding.
லலிதா என்னை திருமணத்திற்கு அழைத்தாள்.
5.Manoj spoke at the meeting.
மனோஜ் கூட்டத்தில் பேசினார்.
6.He sold property
அவன் சொத்தை விற்றான்.
7.We advised him
நாங்கள் அவனுக்கு புத்திமதி கூறினோம்.
8.I prepared lunch on my own
நான் தனியாக மதிய உணவு தயாரித்தேன்.
9.She stabbed him to death
அவள் அவனை குத்திக் கொன்றாள்.
10.They published my book
அவர்கள் என் புத்தகத்தை வெளியிட்டனர்.
இதுமட்டுமல்ல... முதலில் நாம் செய்த பழக்க வழக்கங்களை இப்போது விட்டு விட்டேன் என்று சொல்வதற்கும் பயன்படுத்தலாம்.
உதாரணம்:
Meena used to eat fish மீனா முன்பு மீன் சாப்பிட்டாள்; ஆனால், இப்போது இல்லை. புரியுதா? இந்த இடத்தில்,
Subject + used to + verb
I used to drink coffee
நான் முன்பு காபி குடிப்பேன்; ஆனால், இப்போ இல்லை. புரிஞ்சுதா?
இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி சொல்லும் போது used to என்பதை பயன்படுத்த வேண்டும்.
இப்போ Simple past ல் Negative வாக்கியங்கள் அமைப்பது எப்படின்னு பார்ப்போமா?
இங்கே, Negative வாக்கியமாக மாறும்போது I did not write, I did not say என்று வருகிறதை கவனித்திருப்பீர்களே...
Did என்பது இடம் பெற்றுள்ளதால், அதன் அருகில் Write என்ற Present tense verb தான் வரவேண்டும். சரியா?
இன்னொன்று Do not என்பதை Don't(டோண்ட்) என்று சொல்வது போலவே Did not என்பதை Didn't (டிடின்ட்) என்று சொல்லலாம்.
சரி!
Positive - Negative
He Came அவன் வந்தான் - He did not come அவன் வரவில்லை
I Wrote நான் எழுதினேன் - I did not write நான் எழுதவில்லை
You said நீ சொன்னாய் - You did not say நீ சொல்லவில்லை
They informed அவர்கள் தெரிவித்தனர் - They did not inform அவர்கள் தெரிவிக்கவில்லை
You called நீ அழைத்தாய் - You did not call நீ அழைக்கவில்லை
இவற்றை நன்றாக எழுதிப் பழகுங்கள். இன்னும் நிறைய வாக்கியங்கள் எழுதிப் பழகுங்கள். மீண்டும் அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன்!
-பை! பை! வர்ஷிதா மிஸ்!