தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (27)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (27)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (27)


PUBLISHED ON : செப் 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாய்... ஹாய்... குட்மார்னிங் எவ்ரிபடி... what a wonder... நிறைய பேர் எனக்கு ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதி அசத்துவதில் இருந்து தெரிகிறது. உங்களது தொடர் ஆர்வம் என்னை இன்னும் ஆழமாக பாடம் நடத்த தூண்டுகிறது.

நிலமை/தன்மை பற்றிப் பேச, Be என்ற Auxiliary verb ஐ பயன்படுத்தலாம்.

He can be, He may be, He must be, he should be, He need not be, he would be, He might be.

He may be there - அவன் ஒருவேளை அங்கே இருக்கலாம்.

He must be there - அவன் கண்டிப்பாக அங்கேதான் இருக்க வேண்டும்.

சரி ஒரு எளிய முறையில் இந்த Modal Auxiliaries யை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒருவழி சொல்றேன்.

'முடியும்' என்ற கருத்தைக் கூற Can, Could உபயோகப்படுத்த வேண்டும். 'வேண்டும்' என்ற கருத்தைக் கூற Must, Should, Need போன்றவற்றை பயன்படுத்தலாம். 'வரலாம், போகலாம்' என்ற சந்தேகக் கருத்தைக் கூற May, Might, Would போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

இப்போ ஈஸியா ஞாபகம் வச்சிக்கலாமா?

இவற்றை வாக்கியங்களில் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

He may be a doctor (சந்தேக கருத்து)

அவர் ஒரு டாக்டராக இருக்கலாம்.

He must be a doctor (கட்டாய கருத்து)

அவர் ஒரு டாக்டராக இருக்க வேண்டும்.

You need not be a doctor

நீ ஒரு டாக்டராக இருக்கத் தேவையில்லை.

He can be a doctor

அவர் ஒரு டாக்டராக இருக்க முடியும்.

May - லாம் - May be - இருக்கலாம்

Must - வேண்டும் - Must be - இருக்க வேண்டும்

Be - இரு

Can - முடியும் - Can be - இருக்க முடியும்

இவற்றையெல்லாம் பயன்படுத்திய சில வார்த்தைகளைத் தர்றேன். அவற்றைப் படித்து அதே போல், நீங்களும் புதிய வாக்கியங்களை எழுதிப் பழகுங்க. சரியா?

He may come - அவன் வரலாம்.

She may go - அவள் போகலாம்.

He may not come today - அவன் இன்று வராமலும் இருக்கலாம்.

He might get this job - ஒருவேளை அவனுக்கு இந்த வேலை கிடைக்கலாம்.

He might get the tickets - அவனுக்கு டிக்கெட்டுகள் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

He might recover from his illness - அவன் குணமாக வாய்ப்புகள் மிக மிகக்குறைவு

The friends will be writing lesson - நண்பர்கள் பாடம் எழுதிக் கொண்டிருப்பர்.

My mom might be cooking - என் தாய் சமைத்துக் கொண்டிருக்கலாம்.

You must be taking notes - நீ குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

Mary should be dancing -- மேரி நடனம் ஆடிக் கொண்டிருக்க வேண்டும்.

When I was young I could swim well -- நான் சிறுவனாக இருந்தபோது என்னால் நன்றாக நீந்த முடிந்தது.

When I was a small boy I could play well - நான் சின்னப்பையனாக இருந்தபோது என்னால் நன்றாக விளையாட முடிந்தது.

When I was in mumbai I could speak hindi well - நான் மும்பையில் இருந்த போது நன்றாக இந்தி பேச முடிந்தது.

He tried to sing. but, he could not - அவன் பாட முயன்றான்; ஆனால், முடியவில்லை.

Though - இருந்தாலும் கூட

Though we went early, we could not catch the train - நாங்கள் சீக்கிரமாக சென்றும் கூட எங்களால் ரயிலை பிடிக்க முடியவில்லை.

Though she studied hard, she could not get first mark - அவள் நன்றாகப் படித்தும் அவளால் முதல் மதிப்பெண் வாங்க முடியவில்லை.

Need not

you need not go there - நீ அங்கே போகத் தேவையில்லை.

You need not come here - நீ இங்கே வரத் தேவையில்லை.

You need not pay more than ten rupees - நீ பத்து ரூபாய்க்கு மேல் தரத் தேவையில்லை.

இவற்றை எல்லாம் நன்றாக படித்து மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம்!

பை! பை! வர்ஷிதா மிஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us