PUBLISHED ON : பிப் 03, 2017

ஹாய்... குட்மார்னிங் எவ்ரிபடி!
'வினையெச்சம்' என்பதை படிக்கிறோம் இல்லையா... ரொம்ப ஈஸியா இருக்கும். ஒரு சில வார்த்தைகளை தருகிறேன். அதை படித்துப் பார்த்தவுடன் உங்களுக்கு நன்றாக புரியும்.
உதாரணம்:
1. I wish to give donation.
நான் டொனேஷன் கொடுக்க விரும்புகிறேன்.
2. She tries to cook a nice dinner.
அவள் நல்ல டின்னர் சமைக்க முயற்சி செய்கிறாள்.
3. I like try to buy one of the new cars.
நான் புதிய கார்களில் ஒன்றை வாங்க விரும்புகிறேன்.
4. It is difficult to do.
இதை செய்வது கடினம்.
5. You want to give.
நீ கொடுக்க விரும்புகிறாய்.
இதில், Main verb உள்ள வாக்கியம் முதலிலும் பின், Infinitive வருகிறதா? இப்படித்தான் வாக்கியங்களை அமைக்க வேண்டும். இன்னொன்றையும் நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
To அருகில் எப்போதும், Present tense verb மட்டுமே இடம் பெற வேண்டும். Past tense verb இடம் பெற கூடாது.
எந்த Tense ஆக வாக்கியம் இருந்தாலும் சரி... அதை பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால், Infinitiveல் உள்ள Verb மட்டும் Present tenseல் தான் இருக்க வேண்டும்.
அய்யோ... மண்டைய பிச்சிக்கலாமான்னு தோணுதா... கொஞ்சம் பொறுங்க... நான் வாக்கியங்களில் கொடுக்கிறேன். அப்போ உங்களுக்கு சுலபமா புரியும். சரியா?
Present tense:
1. I try to read the lessons.
நான் பாடங்களை படிக்க முயற்சி செய்கிறேன்.
2. We attempt to write a story
நாங்கள் ஒரு கதை எழுத முயற்சி செய்கிறோம்.
Past tense:
1. I went to the dance class to learn baratham.
நான் பரதம் கற்று கொள்ள நடன வகுப்பிற்கு சென்றேன்.
2. You tried to get a medal.
நீ மெடல் வாங்க முயற்சி செய்தாய்.
Future tense:
1. You will try to get a medal.
நீ மெடல் வாங்க முயற்சி செய்வாய்.
2. You will study well to get good marks
நீ நல்ல மதிப்பெண்கள் பெற நன்றாக படிக்க வேண்டும்.
Continuous tense:
You are trying to get a medal
You were trying to get a medal
You will be trying to get a medal
You must be trying to get a medal
Perfect tense:
You had tried to get a medal
You have tried to get a medal
போதுமா... இதில் இருந்து என்ன புரிகிறது. வாக்கியம் எந்த Tenseல் இருந்தாலும் பரவாயில்லை. Infinitive மட்டும், Present tense verbல் இருக்க வேண்டும் என்பது புரிகிறதா...
நல்லா Practice பண்ணுங்க.
Until then bye... bye..
Varshita.
