தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (53)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (53)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (53)


PUBLISHED ON : மார் 31, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குட் மார்னிங் எவ்ரிபடி...

எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய பொதுவான ஆங்கில வார்த்தைகளை சொல்லி தாங்க வர்ஷிதா மிஸ்... என்று கேட்டிருந்தீர்கள். அப்படியே ஒரு இருபத்தைந்து வார்த்தைகளை கொடுத்திருந்தேன். அவற்றை படித்துவிட்டு, ஆங்கிலத்தில் பேசி எல்லாரிடமும் கலக்கினோம். இன்னும் சில வாரங்களுக்கு இதே போன்று சொல்லிக் கொடுங்க மிஸ் என்று கேட்டிருந்தீர்கள். எனவே, அதே போல், கொடுக்கிறேன். படித்து பேசி அசத்துங்க.

1. Mind your business.

உன் வேலையை பார்.

2. Whats their next move?

அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

3. He is good for nothing fellow.

அவன் ஒன்றுக்கும் உதவாதவன்.

4. Believe me.

என்னை நம்பு.

5. Help yourself.

உனக்கு நீயே உதவி செய்து கொள்.

6. Put out the light.

விளக்கை அணைத்துவிடு.

7. Keep the sandals out.

செருப்புகளை வெளியேவிடு.

8. You are quite obstinate.

நீ மிகவும் அடம் பிடிக்கிறாய்.

9. Is the doctor in?

டாக்டர் உள்ளே இருக்கிறாரா?

10. Do you have a tea or coffee?

உனக்கு டீ வேண்டுமா காபி வேண்டுமா?

11. Are you mad?

நீ என்ன பைத்தியமா?

12. He is an eccentric fellow.

அவன் ஒரு விசித்திரமான மனிதன்.

13. She is an impertinent girl.

அவள் மரியாதை தெரியாத பெண்.

14. I am fond of cycling.

எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் விருப்பம்.

15. Hurry up please.

சீக்கிரம் புறப்படுங்கள்.

16. We shall go together.

நாம் சேர்ந்து போவோம்.

17. We strayed.

நாங்கள் வழியை மறந்துவிட்டோம்.

18. My watch has stopped.

என் கடிகாரம் நின்று விட்டது

19. Is it late?

நேரமாகி விட்டதா?

20. Is there any phone call for me?

எனக்கு ஏதாவது போன் வந்ததா?

21. What post do you hold?

நீங்கள் என்ன பதவியில் இருக்கிறீர்கள்?

22. He absconded.

அவன் தலைமறைவாகி விட்டான்.

23. This is against the law.

இது சட்ட விரோதமானது.

24. I shall be glad to get rid of him.

அவன் ஒழிந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.

25. When do you go to bed?

நீ எப்போது தூங்க செல்வாய்.

26. Many students are absent today.

இன்று பல மாணவர்கள் வரவில்லை.

27. Roopa has curli hair.

ரூபாவிற்கு சுருட்டை முடி உள்ளது.

28. We are poles apart.

நாம் இருவரும் கிழக்கு மேற்கு.

29. Pack up your bag and baggage.

உன் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொள்.

30. Let bygones be bygones, take care in future.

போனது போகட்டும் இனியேனும் கவனமாய் இரு.

இவற்றை நன்றாக படித்து, உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமும், நண்பர் களிடமும் பேசி பேசி பழகுங்கள்... அப்போது தான் பிழையில்லாமல் நன்றாக பேச முடியும். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்....

பை... பை... வர்ஷிதா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us