PUBLISHED ON : ஜூன் 29, 2018

அ நிறம் | அளவு
தேவையானப் பொருட்கள்:
கொண்டை கடலை - 2 கப்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - சிறிதளவு
கொத்தமல்லி, வெங்காயம் நறுக்கியது - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொண்டை கடலையை, எட்டு மணிநேரம் ஊற வைத்து, அத்துடன், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, உப்பு சேர்த்து, அரைத்து, கொத்தமல்லி தழை, வெங்காயம் சேர்த்து பிசைந்து, வடைபோல் தட்டி, கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுத்தால், கொண்டை கடலை வடை தயார்! சத்து நிறைந்தது; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்!
- டி.சரண்யா, பொள்ளாச்சி.
