PUBLISHED ON : டிச 04, 2015

அ நிறம் | அளவு
ஒரு நாட்டின் தட்பவெப்பம் என்பது, வருடம் முழுவதும் அது பெற்றுக் கொள்கிற ஒருவகை வானிலை ஆகும். விஞ்ஞானிகள் உலகை ஐந்து பெரும் தட்பவெப்ப மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.
வெப்ப மண்டலப் பகுதிகள் சூடான, ஈரமான தட்பவெப்பநிலைகளைக் கொண்டுள்ளன. வறண்ட தட்பவெப்ப நிலைகளைக் கொண்ட பகுதிகள், குறைந்தளவு மழையையே பெற்றுக் கொள்கின்றன. மித வெப்ப மண்டலப் பகுதிகளில், குளிர்ந்த குளிர்காலங்களும் வெது வெதுப்பான கோடைகாலங்களும் உள்ளன. கண்டப் பகுதி தட்பவெப்ப நிலைகளில், குளிர்ந்த குளிர்காலங்களும், இலேசான கோடை காலங்களும் உள்ளன. துருவத் தட்பவெப்ப நிலைகளில், வருடம் முழுவதிலும் உறைய வைக்கும் வெப்ப நிலைகள் உள்ளன.
