தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கிளிமஞ்சரோ!

கிளிமஞ்சரோ!

கிளிமஞ்சரோ!


PUBLISHED ON : ஜூன் 07, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயரமான மலை கிளிமஞ்சரோ. கென்யா தங்கனிகா எல்லையில், தங்கனிகா பகுதியில் உள்ளது கிளிமஞ்சரோ மலைமுடி. நைரோபியிலிருந்து 132 மைல்கள் தெற்கே இம்மலை இருக்கிறது. கிளிமஞ்சரோவின் உயரம் 19,565 அடிகள். உலகின் கம்பீரமான அழகிய மலைகளில் ஒன்று இது. இம்மலையின் அடிப்பாகம் 40 மைல் குறுக்களவைக் கொண்டது.

கிளிமஞ்சரோ மலைமுடியைத் தவிர வேறு இரண்டு முகடுகளும் இதில் உண்டு. கிபு, மாவன்ஸி என்பவை அவை. இவ்விரண்டில் மேற்கேயுள்ள கிபு உயரமானது. புவியியல்படி இளமையானது. கிழக்குப் பகுதியில் உள்ள மாவன்ஸி முதியது (17,300 அடிகள் உயரம்) மிகப்பெரிய எரிமலை வாயுடன் கூடியது.

கிளிமஞ்சரோ மலைமீது ஏற முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. முதன் முதலில் 1848ல் இம்மலையைப் பற்றி உலகுக்குக் கூறியவர் ஜோன்னஸ் ரெப்மான் என்ற ஜெர்மானிய பாதிரியார். ஆனால், அப்போது யாரும் இவர் குறிப்பிட்டதை நம்பவில்லை. 1861-62ல் ஜியாகராபிகல் சொஸைடி-பாரன்கார்ல்வான் டெர், டெக்கான் என்ற மற்றொரு ஜெர்மானியர் இங்கு போய்வந்து கொடுத்த குறிப்புகளை ஏற்றுக் கொண்டது. 1889ல் இம்மலைமீது, டாக்டர் ஹான்ஸ் மேயர், லுட்விக்புட்ஸ் செல்லர் என்ற இருவரும் மிகுந்த பிரயாசையுடன் ஏறினர்.

15 ஆயிரம் அடிகளுக்கு மேல் பனிமூடிக் கிடக்கும் இம்மலை மீது 13லிருந்து 15 ஆயிரம் அடிவரை மண் மூடிய பகுதியும், 9,500லிருந்து 13 ஆயிரம் வரை புல்வெளியும், 6,000லிருந்து 9,000 வரை காடுகளும், 6,000 அடிகளுக்குக் கீழே பயிரிடுவதற்கான நிலங்களும், 4 ஆயிரம் அடி வரை மனிதர் நுழையாத புதர்களும் மண்டிக்கிடக்கும்.

இம்மலையின் வடக்குப் பகுதி வறட்சி யானது. தென்பகுதிதான் வளமான பிரதேசம். இங்கு வாழும் சக்கா இனமக்கள் உழைப் பாளிகள்; ஏராளமான வாழை பயிரிடப் படுகிறது. பிக்மி என்ற குட்டையான மாடுகள் உண்டு. 6,000த்திலிருந்து 7 ஆயிரம் அடிகள் வரை மனிதர்கள் வாழமுடியாத பகுதி. 10 ஆயிரம் அடிகள் வரை அடர்ந்த காடுகள், மரங்களும், செடி கொடிகளும் பின்னிப் பிணைந்து கிடக்கும். இப்பகுதிகள் யானை களின் வாழிடம், காட்டு மான்கள், காட்டுப் பன்றிகள், விதவிதமான பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், அணில்கள் ஏராளம். சக்கா மக்கள் இக்கானகத்தில் ஏராளமான தேன் சேகரிக் கின்றனர். உலகின் அற்புதங்களில் ஒன்று கிளிமஞ்சரோ மலைப்பகுதியின் அழகு என்பது உலகச் சுற்றுலா வாசிகளின் கணிப்பு!

வாங்க குட்டீஸ்... ஒரு எட்டு போயிட்டு வருவோம்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us