தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/க்ரைம்! (1)

க்ரைம்! (1)

க்ரைம்! (1)


PUBLISHED ON : நவ 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு குற்றக் காட்சி என்பது....

குற்றம் நடந்த இடத்திற்கு, 'குற்றக் காட்சி' என்று பெயர். அது அறையாகவோ, காராகவோ, ஒரு வயலாகவோ கூட இருக்கலாம். அந்த இடம் குற்றம் நடந்ததற்கான ஆதாரத்தை பெற்றிருக்கும். குற்றம் எப்படி ஆராயப்படுகிறது என்று பார்ப்போமா செல்லூஸ்.

ஒரு உயிரற்ற உடல் அறையின் மத்தியில் கிடக்கிறது. கதவோ உட்புறம் தாழிடப்பட்டு உள்ளது. ஒரு நாற்காலி அருகே கிடக்கிறது. அங்கே ரத்தம் சிந்தவில்லை. குண்டு வெளியேறி புகையுடன் கூடிய துப்பாக்கி இல்லை. உயிரை காப்பாற்றி கொள்ள நடந்த போராட்ட அறிகுறிகள் இல்லை. உடலில் எந்த காயமும் இல்லை. ஆனால், அருகே உடைந்த கண்ணாடி துண்டுகள் மட்டும் இருந்தது. என்ன தான் நடந்தது?

நீங்கள்தான் இந்த குற்றத்தை கண்டுபிடிக்க போகும் துப்பறியும் நிபுணர் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பல கேள்விகள் கேட்க வேண்டும். (நல்ல வேளை பள்ளி போல பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்) இது ஒரு கொலைக் காட்சியா? இது நிஜமாகவே கொலைதானா? நீங்கள் உண்மையை கண்டுபிடிக்க, ஒவ்வொரு சிறிய தகவலும் மிக முக்கியம். ஒருவேளை இந்த நபர் ஒரு பல்பை மாற்ற நாற்காலியில் ஏறி இருக்கலாம். அவருடைய ஈர கைகளால் அவருக்கு மின்சார ஷாக் ஏற்பட்டு இருக்கலாம்.

ஒரு நெருங்கிய பார்வை!

பார்ப்பதற்கு தெரிவது போல எல்லா சமயங்களிலும் ஒரு விஷயம் இருப்பதில்லை. இந்த ஜன்னல் கதவின் இடுக்கில் யாருடைய நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டின் மிக சிறிய நூலிழையோ சிக்கி உள்ளது. இதோ மிக நுண்ணிய காலடி தடம் உள்ளது. இப்போ கூர்ந்து பாருங்கள். உடலை மிக நெருங்கி பார்க்குபோது பல விஷயங்கள் புலப்படலாம்.

அந்த நபரின் முட்டிக்குபின் மிக சின்ன ஊசி குத்திய அடையாளம் உள்ளது. இதன் மூலம் விஷம் செலுத்தப்பட்டுள்ளது என்பது புரிகிறது. இது ஒரு விபத்து அல்ல திட்டமிட்ட கொலை. குற்ற காட்சிகள் கவனமான தேடலுக்கு பின், குற்ற காட்சி தன்னுள் புதைத்து இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தும் நிபுணர்களின் திறமை எதை தேட வேண்டும் என்பதை அறிந்து இருப்பதே.

துப்பு துலக்கலாம் வாங்க!

நாம் எங்கே போனாலும் ஏதாவது ஒரு அடையாளத்தை விட்டு வந்திருப்போம்.

ஒரு கடி ஆப்பிள் கூட குற்றவாளியை பிடிக்க உதவும்.

துப்பறியும் நாய்!

1- தொடரும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us