PUBLISHED ON : செப் 17, 2010

* அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒருவர், குப்பைத் தொட்டிக்கு அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். தீடீரென குப்பை எடுத்துச் செல்ல வந்த லாரி, அவரையும் குப்பையோடு சேர்த்து வாரிக் கொண்டு போனது. கண் விழித்த அவர், போட்ட சப்தத்தை கேட்டு வண்டியை நிறுத்தி அவரை மீட்டனர்.
* கணித குறியீடுகள் சில !
நாம் கணிதத்தில் சில குறியீடுகளை பயன் படுத்துகிறோம். அதாவது கூட்டுக என்ற பொருளுக்கு, '+' என்ற குறியீட்டை பயன்படுத்து கிறோம். அதுபோல் கழித்தல் என்பதற்கு, '-' என்றும், பெருக்கல் என்பதற்கு, 'து' என்றும், வகுத்தல் ' ' என்றும் குறியீடுகளை பயன்படுத்து கிறோம். ஆனால், இந்த குறியீடுகளை முதன் முதலில் யார் யார் அறிமுகப் படுத்தினர் என்று தெரிந்துக் கொள்வோமா? ஜெர்மனியை சேர்ந்த ஜோஷர்ன லீட்டேன் என்கிற கணித அறிஞர், '+ மற்றும் -' குறியீடுகளை கி.பி., 1498-ம் ஆண்டு, தனது எண் கணித நூலில் அறிமுகம் செய்தார். இங்கிலாந்தை சேர்ந்த கணித அறிஞர் கி.பி., 1631-ம் ஆண்டு, 'கிளாவிஸ் மாதமாடிகே' என்ற லத்தீன் மொழி கணித நூலில், 'து' என்கிற பெருக்கல் குறியீட்டை அறிமுகம் செய்தார். ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ஜோஷான் ஷென்ரிச் என்ற கணித அறிஞர் கி.பி., 1631-ல் தனது இயற்கணித நூலில், வகுத்தல் குறியை அறிமுகம் செய்தார். வகுத்தல் குறியீட்டை கி.பி., 1544-ல் மைக்கேல் ஸ்டிபல் என்ற கணித மேதை தனது அரித்மெடிகா இண்டெக்ரா என்ற நூலில் அறிமுகப் படுத்தினார். ஆனால், பின்னங்கள், '3/5' என்ற முறையை முதன் முதலில் அறிமுகம் செய்தவர்கள் பண்டைய இந்தியர்கள்.
