PUBLISHED ON : பிப் 07, 2014
அ நிறம் | அளவு
* வீட்டிற்கு புளி வாங்கும்போது குறைந்த அளவு வாங்குவதே நல்லது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதிகம் வாங்கி வைத்தால் புளியில் நிறைய பூச்சிகள் வந்து சேர்ந்து விடும். புளியில் பூச்சிகள் ஒட்டிக் கொண்டாலும் தெரியாது. அப்படி அதிகம் வாங்கி வைத்திருந்தால், அதில் சிறிது உப்பும், வெல்லமும் கலந்த தண்ணீரைத் தெளித்தால் பூச்சிகள் வராது. துணியில் கறைப் பட்டு விட்டால் அரிசி கழுவும் தண்ணீரில் கறைப்பட்ட துணிகளைப் போட்டால் கறைகள் சீக்கிரம் மறையும்.
* நமுத்துப் போன பிஸ்கட்டுகளை லேசான சூட்டில் உள்ள தோசைக் கல்லில் பரவலாக வைத்து சற்று நேரத்திற்கு பின் எடுத்தால், பழைய மொரமொரப்பு வந்து விடும்.
