தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டீஸ் கார்னர்

குட்டீஸ் கார்னர்

குட்டீஸ் கார்னர்


PUBLISHED ON : அக் 01, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் வாழ்கிறது இந்த பந்தல் பறவைகள். அதாவது ஆண் பறவைகள் சரியான இன்ட்டீரியர் டெக்கரேடர்ஸ்தான் போங்கள். நீங்க மட்டும்தான் உங்கள் வீடுகளை அலங்கரிப்பீர்களா? இந்த பந்தல் பறவை, மரக் குச்சிகளை நட்டு பந்தல் போடும். பூக்கள், விதைகள், காப்பிக் கொட்டை, பாம்புத் தோல் போன்ற பொருட்களை கொண்டு வந்து ஆங்காங்கே தான் அமைத்த பந்தலில் வைத்து டெக்கரேட் செய்யும். சில பறவைகள் கூரையுடன் கூடிய குகை போன்ற அமைப்பை செயற்கையாய் உருவாக்கும். இந்த குகையில் பூக்கள், கனிகள், காளான்களை கொண்டு வந்து ஆங்காங்கே குவித்து ஒரு வித்தியாசமான, 'லுக்' கொடுக்கும். ஒவ்வொரு ஆண் பந்தல் பறவையும் தன்னுடைய திறமையை பயன்படுத்தி பந்தல் போடுவர்.

குட்டீஸ்... உங்க மம்மி சுத்தமா வைச்சிருக்கிற வீட்டை, ஆங்காங்கே கண்டதை போட்டு அசிங்கம் பண்ணும் உங்களை பார்த்தால், பந்தல் பறவைக்கு பிடிக்கவே பிடிக்காது. 'பேட் சில்ரன்' என்று சொல்லும். என்ன பந்தல் பறவைகளை உங்க வீடுகளுக்கு வரச்சொல்லட்டா புஜ்ஜீஸ்...

* குவார்ட்ஸ்... குவார்ட்ஸ்

பரவலாக கிடைக்கும் தாது பொருட்களில் ஒன்று படிகம். படிகத்தின் மற்றோர் பெயர் சிலிக்கா. ஆங்கிலத்தில் குவார்ட்ஸ் என்று அழைப்பர். சுத்தமான படிகம் வெள்ளை நிறத்தில் இருக்கும். அழுக்குகள் கலந்த படிகம் சிகப்பு, மஞ்சள், பழுப்பு, நீலம், கறுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். கருங்கல் என்று நாம் அழைக்கும் கல்லில், பெரும்பாலும் படிகமே அடங்கியிருக்கிறது. வெண்மணல் சுத்தமான படிகங்களாகும். எல்லா மணல்களுமே பெரும் பாலும் படிகங்களே.

கண்பார்வை சிகிச்சை செய்யும் கருவிகளிலும், கண் பார்வைக்கு மருத்துவர் கூறும் கண்ணாடிகளிலும் படிகம் உபயோகப் படுத்தப்படுகிறது. வானொலி பரப்பும் நிலையங்களை சரியான அலை நீளத்திற்கு வைத்துக் கொள்வதற்கு சுத்தமான படிகம் பயன் படுத்தப்படுகிறது.

ஆறு முகப்புகளுடைய பெரிய தெளிவான படிகங்கள் சில சமயங்களில் கண்டுப்பிடிக்கப் படுகின்றன. அவற்றை, 'பாறைப்படிகம்' என்பர். அதை கடுமையான வெப்பத்தில் <உருக்கினால் நமக்கு பற்ற வைக்கப்பட்ட படிகம் கிடைக்கும். இதன் உபயோகமும், விலை மதிப்பும் அதிகம். 1710 சென்டிகிரேட் சூட்டில் படிகம் உருகும். விரிவடையும் தன்மையும், சுருங்கும் தன்மையும் மற்ற பொருட்களைப் பார்க்கி<லும் தெளிவானது. ஒளி ஊடுருவ கூடியது. இத்தகைய படிகங்கள் ரசாயன ஆய்வுக் கூடங்களில் பயன்படுகிறது. ஒளியின் அலைகளையும், ஒளி மிக்க வெப்பத்தில் அலைகளையும் படிகம் எளிதாக கடத்தக் கூடியவை. ஆரோக்கியத்தை தரும் அல்ட்ரா வயலெட் கதிர்களை கண்ணாடி உறிஞ்சிவிடும். எனவே, உடல் நலம் தரும் ஆரோக்கிய ஆஸ்ரமம், வியாதியை குணப்படுத்தும், சீதோஷ்ணமுள்ள இடத்தில் அமைந்த வைத்திய சாலைகளில், கூரைகளுக்கு பற்றவைக்கப்பட்ட படிகம் பயன்படுத்தப் படுகிறது. இதனால் உடல்நலம் தரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் பிணியாளிகளுக்கு கிடைக்கிறது. மேலும், செயற்கை சூரிய ஒளி மூலம் சிகிச்சை செய்வதற்கு படிகவிளக்குகள் பயன்படுத்தப்படுகிறது. இவை சூரியரினின் செயற்கை ஒளியை தருகின்றன. ஹவ் ஸ்வீட்!

* ஜெர்மனியிலுள்ள ஒரு ரெஸ்ட்டாரெண்டுக்கு இறைச்சி கொடுக்கும் ஒரு வியாபாரி மிகவும் கோபம் அடைந்தார். காரணம், ரெஸ்ட்டாரெண்ட் உரிமையாளர் இறைச்சிக்குரிய பணத்தை நீண்ட நாட்களாக கொடுக்கவில்லை. எனவே, ஆத்திரம் கொண்ட வியாபாரி ரெஸ்ட்டாரெண்டிலிருந்த சமைத்த உணவுப் பொருட்களையும், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டிருந்த இறைச்சியையும் திருப்பி எடுத்து சென்றுவிட்டார்.

* மைக்கேல் ஜாக்சனா ? நானா ?

ஆர்கஸ் பீஸன்ட் எனப்படும் இந்த ஸ்டைல் கார பறவை, போர்னியோ மற்றும் மலாய் பகுதியில் காணப்படுகிறது. கவர்ச்சியான, விரிவான இறகுகளை கொண்டவை. சில இறகுகள் ஒரு மீட்டர் நீளம் இருக்கும். டான்ஸ் ஆடுவதில் மைக்கேல் ஜாக்சனே பிச்சை வாங்கணும். கஷ்டமான டான்ஸ் ஆடி முடித்துவிட்டு, தன் இறக்கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, கேடயம் போல் விரித்து தன்னுடைய கேர்ள் பிரெண்ட்க்கு முன்பாக ஸ்டைலா போஸ்பண்ணும் குட்டீஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us