PUBLISHED ON : மே 16, 2014

அபாய அறிவிப்புக்குச் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவது ஏன்?
நிறமாலையிலுள்ள நிறங்களுள் சிவப்பு நிறத்துடன் தான் நமது கண்ணின் உணர்வுத் திறன் மிகுதி என நாம் தவறாக நினைக்கிறோம். உண்மையில் மஞ்சள் நிறத்துடன் தான் கண்ணின் உணர்வுத் திறன் மிக அதிகம். ஆனால், சாதாரண டங்ஸ்டன் விளக்குகளும், மஞ்சள் நிற ஒளியைத் தருவதால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேறுபடுத்திப் பார்க்க இயலாமல் குழப்பம் உண்டாகிறது. எனவே தான் அபாய அறிவிப்பில் சிவப்பைத் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்துகின்றனர்.
மேலும், போக்குவரத்து வழிகாட்டி விளக்குகளில் உ<ள்ள சிவப்பும், பச்சையும் வேறு எந்த இரண்டு நிறங்களையும் விட வேறுபாடு காணும் வகையில் பொருத்தமாக அமைந்துள்ளன. அடுத்து, சிவப்பு நிறத்தின் அலை நீளம் மிகுதியாக இருப்பதால், பனி மற்றும் மழைக் காலங்களிலும் சிவப்பு நிறத்தைத் தூரத்தி லிருந்தே துல்லியமாக காண முடிகிறது. எனவே தான் அபாய அறிவிப்புக்குச் சிகப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றனர்.
