PUBLISHED ON : அக் 08, 2010

மரத்தவளை !
படத்தில் இருக்கும் இந்த மூக்கு தவளை ஒரு வித்தியாசமான மரத் தவளை. இந்தோனேஷியாவின் போஜா மலைத்தொட ரிலுள்ள மரங்களில் வாழ்கிறது. மூக்கின் மீது ஆணி போன்று காணப் படும். இது சப்தம் போடும்போது மூக்குப்பகுதி விரிகிறது. அமைதியாக இருக்கும் போது சுருங்கி விடுகிறது. இந்த மரத்தவளையை கண்டுபிடிக்கும்போது ஆராய்ச்சியாளர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு சில உயிரினங்களையும் கண்டுப் பிடித்தனர். சாதுவான குணம் கொண்ட அடர்ந்த ரோமங்கள் கொண்ட எலிகள், மஞ்சள் நிற கண்களை கொண்ட ஜிக்கோ என்ற பல்லி இனம் மற்றும் கங்காரு இனத்தில் மிகச் சிறியதான காட்டு வாலபி போன்றவற்றையும் கண்டுபிடித்தனர்.
பறக்கும் அணில் !
வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அணில்கள் அதிகமாக காணப்படுகிறது. முன்னங் கால்களுக்கும், பின்னங்கால்களுக்கும் இடையே காணப்படும் சவ்வு போன்ற விரிவடையும் தோல், இதற்கு இறக்கைகளாக பயன்படுகிறது. இரவில் வேட்டையாடும், பகலில் ஓய்வு எடுக்கும். அதிக பட்சம் 48 மீட்டர் தூரம் வரை பறந்து செல்வார். போர்னியாவில் காணப்படும் அணில் 7 அங்குலம் நீளம் மட்டுமே இருக்கும். ஆசிய அணில் 3 அடிநீளம் வரை இருக்கும்.
