PUBLISHED ON : பிப் 19, 2016

அ நிறம் | அளவு
'சீட்டா' என்று அழைக்கப்படும் இந்த மிருகம், தரையில் வாழும் மிருகங்களிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியது. ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் ஓடக்கூடியது, ஒரு மணி நேரத்தில் சராசரியாக ௭௦ முதல் ௭௫ மைல் தூரம் வரை ஓடும் இந்த மிருகம் பூனை குடும்பத்தைச் சேர்ந்தது. சீட்டா மிருகம் மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும், புதர் மறைவிலும்தான் வசிக்கும்.
பூனைகள் வெகுதூரம் வரை ஓடாது. அவை தங்களுக்கு தேவையான இரையைப் பதுங்கி இருந்து தங்கள் அருகில் வரும்வரை காத்திருந்து, பிறகு பாய்ந்து பிடிக்கும். அது பாயும் நிலை மிகவும் வேகமுள்ளதாக இருக்கும்.
