
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இங்கிலாந்தின் பேரரசராக இருந்த போது, இந்தியர்கள் சிலருக்குப் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு விருந்து அளித்தார். அதில் பெரும்பாலும் தென்னிந்திய உணவு வகைகளைப் பரிமாற விரும்பினார் மன்னர்.
அதற்காக, தஞ்சாவூர் தலைவாழை இலை, கல்லிடைக் குறிச்சி அப்பளம், கேரளத்து நேந்திரம் பழம், ஆந்திரத்து ஆவக்காய் ஊறுகாய் என்று பலவும் விமானம் மூலம் லண்டனை அடைந்தன.
அரண்மனைச் சமையல் கலைஞர்களே எல்லாத் தென்னியந்திய உணவு வகைகளையும் தயாரித்தனர். பல பதார்த்தங்களுக்கு இடையில் வட்டமான கரிய பொருள் ஒன்று இலையில் வைக்கப்பட்டிருந்தது. அது என்னவென்று இந்தியர்களுக்கு புரியவில்லை.
விருந்து முடிந்து சில நாட்களுக்குப் பிறகு தான் உண்மை தெரிந்தது. அப்பளத்தைப் பத்திரமாக அனுப்ப விரும்பி ஒரு அப்பளம், அதன் மீது ஒரு வட்டமான எண்ணெய்க் காகிதம், அதன் மீது ஒரு அப்பளம் என்ற முறையில் அடுக்கி இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்திருந்தனர். அரண்மனைச் சமையற்காரர்கள் அப்பளத்தை எறிந்து விட்டு, காகிதத் துண்டுகளை எண்ணெயில் பொறித்துப் பரிமாறி விட்டனர் என்ற உண்மை.
சூப்பர் நோ!

