
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை தொழுநோயாளிகளின் ரத்தம் படிந்த ஆடைகளைத் துவைத்துச் சுத்தம் செய்தபடி இருந்தார் அன்னை தெரசா. அப்போது, அமெரிக்க முன்னால் ஜனாதிபதி கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடி, தெரசாவைப் பார்ப்பதற்காக உள்ளே வந்தார். கையில் அழுக்கான சோப்பு நுரையோடு இருந்த அன்னை தெரசாவிடம் கை குலுக்கும் ஆவலில் கைகளை நீட்டினார்.
'எனது கைகள் அழுக்காக இருக்கின்றன' என்று கூறி, அவரிடம் கை குலுக்காமல் கைகளை மறைத்தார்.
'அன்னையே! சேவையால் அழுக்கடைந்த இந்தக் கரங்களைத் தொட விரும்புகிறேன். தயவு செய்து மறுக்காதீர்கள்' என்று அன்னையின் கைகளை அன்புடன் குலுக்கினார் ராபர்ட் கென்னடி.

