தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பேரீச்சம் பழம் கல்கோனா!

பேரீச்சம் பழம் கல்கோனா!

பேரீச்சம் பழம் கல்கோனா!


PUBLISHED ON : ஜூலை 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பேரீச்சம் பழம் - 100 கிராம்

முந்திரி பருப்பு - 25 கிராம்

வேர்க்கடலை - 25 கிராம்

பாதாம் பருப்பு - 25 கிராம்

ரவை - 1 தேக்கரண்டி

நெய், வெல்லம், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

முந்திரி, பாதாம், வேர்கடலையை தனித்தனியாக பொடி செய்யவும். பேரீச்சை பழத்தில் விதை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில், நெய் ஊற்றி, வெட்டிய பேரீச்சம் பழத்தை வதக்கவும். அதில், பாதம், முந்திரி, வேர்க்கடலை பொடிகளைப் போடவும். இறுதியில், ரவையை துாவி நான்றாக கிளறவும்.

சிறிது தண்ணீரில், வெல்லத்தை கரைந்து நன்றாக காய்ச்சவும். அதில், பேரீச்சம் பழக்கலவையை போட்டு கிளறி, நெய் சேர்த்து பதம் வந்தவுடன் இறக்கவும்.

ஒரு தட்டில் நெய் தடவி, அந்த கலவையை கொட்டி, சிறு சிறு உருண்டையாக பிடிக்கவும். சுவையான, 'பேரீச்சம் பழம் கல்கோனா தயார்!' சத்துக்கள் நிறைந்தது. குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவர்.

- சி.வரலட்சுமி, சென்னை.

தொடர்புக்கு: 98849 45629

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us