தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கழுதையின் மரணம்!

கழுதையின் மரணம்!

கழுதையின் மரணம்!


PUBLISHED ON : ஜூலை 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டூர் கிராமத்தில், தேவராஜ் என்ற வணிகர் இருந்தார். வியாபார நிமித்தமாக, அடிக்கடி வெளியூருக்கு செல்வார். மூட்டைகளை சுமக்க, ஒரு கழுதை வைத்திருந்தார். அழகிய நாய் ஒன்றையும், அன்புடன் வளர்த்து வந்தார்.

ஒரு நாள் -

மூட்டை முடிச்சுகளை கழுதையில் ஏற்றி, வெளியூருக்குப் புறப்பட்டார். நாயும் உடன் சென்றது.

பகல் நேரம், கொளுத்தும் வெயில். வணிகருக்கு தாகம் எடுத்தது; கழுதையை நிறுத்தி, ஒரு சிறு மூட்டையைப் பிரித்து, தண்ணீரை குடித்தார். அந்த பகுதியில், பசுமை அடர்ந்திருந்ததைக் கண்டு இளைப்பாற எண்ணி, ஒரு மரத்தடியில் படுத்தார்.

பெரும் சுமையால் அவதிப்பட்ட கழுதை, பசும் புல்வெளியைக் கண்டதும் மகிழ்ச்சியாக மேயத் துவங்கியது.

கழுதையின் அருகே சென்ற நாய், 'எனக்கு மிகவும் பசிக்கிறது; மயக்கம் வரும் போல் இருக்கிறது. தயவுசெய்து, சிறிது நேரம் தரையில் படுத்துக் கொள். உன் முதுகில் உள்ள, மூட்டையில், எனக்கு தேவையான உணவு உள்ளது. அதை தின்று, பசியை போக்கி கொள்கிறேன்; இந்த உதவியை செய்வாயா...' என்றது.

அந்த வேண்டுகோளை பொருட்டாக மதிக்கவில்லை கழுதை. அதன் மனதில், 'நாய்க்கு பசித்தால் எனக்கு என்ன' என்ற எண்ணமே இருந்தது.

கெஞ்சி கதறிய நாய்க்கு, இரக்கம் காட்டாமல், புல் மேய்வதில் கவனம் செலுத்தியது. நாய் கதறியதால் எரிச்சல் அடைந்த கழுதை, 'நச்சரித்து என்னை மேய விடாமல் தடுக்கிறாய்; இதை தொடர்ந்தால், எட்டி உதைத்துக் கொன்று விடுவேன்... உனக்கு உணவு தேவை என்றால் எஜமானை எழுப்பி கேள்...' என்றது.

பசியால் வாடிய நாய், பரிதாபமாக, எஜமான் அருகே சுருண்டு படுத்துக்கொண்டது.

அப்போது, அந்த வழியாக ஓநாய் ஒன்று, வேகமாக வந்து கொண்டிருந்தது. உணவு தேடிய ஓநாயின் கண்ணில், கழுதை தென்பட்டது.

ஓநாயைக் கண்ட கழுதைக்கு, உதறல் எடுத்தது. அது நாயிடம் மிகப் பணிவாக, 'ஒரு ஓநாய் வருகிறது... அதனிடமிருந்து என்னைக் காப்பாற்று...' என்று கெஞ்சியது.

'கழுதையே... உன் உயிர், ஓநாயின் கையில் உள்ளது; உன்னைக் காப்பாற்ற வேண்டிய எஜமான் துாங்கிக் கொண்டிருக்கிறார்; அவர் எழுந்ததும், உன் கோரிக்கையை சொல்; நிறைவேற்றுவார்...' என்றது நாய்.

'நீ நன்றி உள்ள பிராணி; இப்படிச் சொல்லலாமா... எப்படியாவது என்னைக் காப்பாற்று...' என்று கெஞ்சிய கழுதை மீது, ஓநாய் வேகமாக பாய்ந்து தாக்கியது.

அடுத்த கணம், சுருண்டு விழுந்து இறந்தது கழுதை. அதன் முதுகில் இருந்த மூட்டைகள் சிதறின.

குட்டீஸ்... உதவி செய்து வாழ வேண்டும் என்பதை மனதில் பதியுங்கள்.

- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us