
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, புனித இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில், 1967ல், 4ம் வகுப்பு சேர்ந்த போது, ஆங்கில பாடத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன்.
அப்போது, பொக்கிஷமாக கிடைத்தார் பாசத்திற்கு உரிய வகுப்பாசிரியை ஜாஸ்பின். நல்ல நிறத்தில் ஒல்லியாக இருப்பார்; அழகிய, 'பிங்க்' வண்ணத்தில் புடவை கட்டியிருப்பார்; விரும்பும் வகையில் கொண்டை போட்டிருப்பார்.
அருமையாக, எளிமையாக, கரிசனையுடன் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். நான்கு கோடு போட்ட நோட்டில் எழுதவும், முறையான உச்சரிப்புடன் வாசிக்கவும் கற்றுக் கொடுத்தார்.
அவர் போட்ட விதை, ஆங்கில மொழியை நன்றாக படித்து சிறப்படைய உதவியது. அவர் போலவே ஆசிரியர் பணியில் விரும்பி சேர்ந்தேன்.
அவரது கனிவான அணுகுமுறையை, பணிக்காலத்தில் பின்பற்றினேன். என் வகுப்பு குழந்தைகள் பின்தங்கி விடக்கூடாது என்பதில், கவனமாக செயல்பட்டேன்.
இவ்வாறு, முழுமூச்சாக உழைத்ததால் மாநில நல்லாசிரியர் விருதுடன் ஓய்வு பெற்றேன்.
என் வயது, 60; இன்றும் அந்த ஆசிரியையை காணும் ஆசை பொங்கி வழிகிறது. அவரை வணங்கி, பாதங்களை முத்தமிட தோன்றுகிறது. இந்த கடிதம் மூலம் என் அன்பை வெளிப்படுத்துகிறேன்.
- சா.ரோஸ், விருதுநகர்.
தொடர்புக்கு: 99948 47058

