தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வஞ்சக பாம்பு!

வஞ்சக பாம்பு!

வஞ்சக பாம்பு!


PUBLISHED ON : மே 16, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படூர் காட்டில், பாம்பும், தவளையும் வசித்து வந்தன. உருண்டு புரண்டு தவளையிடம் வந்த பாம்பு, 'என்னைப் பார்த்து பயப்படாதே... உன்னை பிடித்து விழுங்க மாட்டேன்...' என்று, நய வஞ்சகமாகப் பேசியது. அதன் பேச்சை நம்பியது போல் நடித்தது தவளை.

'இந்த தவளை என் பேச்சில் மயங்கிவிட்டது. அது நன்றாக கொழுத்தவுடன், 'லபக்'கென்று பிடித்து, விழுங்கி விடலாம்' என, மகிழ்ந்து காத்திருந்தது நய வஞ்சக பாம்பு.

முள்ளை முள்ளால் எடுக்க எண்ணியது தவளை. பாம்புக்கு சரியான பாடம் புகட்ட யோசனை செய்தது. மூளையை கசக்கி, ஒரு திட்டத்தை உருவாக்கியது.

அதை செயல்படுத்தும் விதமாக, 'பாம்பு அண்ணா... பக்கத்து கிராமத்தில் உள்ள தோட்டத்தில், எங்க பாட்டி, தாத்தா மற்றும் உறவினர் எல்லாம் இருக்காங்க... அவர்களை சந்திக்க வர்றீங்களா...' என்று அழைத்தது.

பாம்புக்கு மிகவும் மகிழ்ச்சி. 'தவளையின் குடும்பத்தை நன்றாக அறிந்து கொண்டால், அவ்வப்போது எளிதாக பிடித்து தின்று, பசியை தீர்த்துக் கொள்ளலாம்; இரையைத் தேடி அலைந்து, வேட்டையாட வேண்டிய அவசியம் ஏற்படாது' என எண்ணியது.

மறுநாளே தவளையுடன் புறப்பட தயாரானது பாம்பு.

அப்போது மிகவும் கனிவுடன், 'பாம்பு அண்ணா, நீங்கள் வேகமாக நடப்பீங்க. நான், தத்தி தத்தி மெதுவாக தான் நடப்பேன். எனவே, சற்று முன்னதாகவே புறப்பட்டு சென்று, காட்டு எல்லையில் காத்திருக்கிறேன்...' என்றது தவளை.

அதன்படி காட்டு எல்லையில், இரண்டும் சந்தித்தன.

'உன் உறவினர் தங்கியிருக்கும் இடம் இன்னும் எவ்வளவு துாரம்...' என கேட்டது பாம்பு.

'அருகில் தான் இருக்கு... வேகமாக வாங்க போகலாம்...' என்று கூறி, கருடன்களின் சரணாலய பகுதிக்கு அழைத்து சென்றது.

வளைந்து நெளிந்து வந்த பாம்பை கண்டவுடன், மகிழ்ந்து பாய்ந்தது கருடன். மிகவும் லாவகமாக வேட்டையாடி, காலால் துாக்கி பறந்தது. திட்டம் சிறப்பாக நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்தது தவளை.

அரும்புகளே... வஞ்சகமாக ஏமாற்றி அழிக்க நினைத்த பாம்புக்கு கிடைத்த தண்டனையை பார்த்தீங்களா... திட்டமிட்டு செய்தால், எதிலும் வெற்றி கிடைத்தே தீரும்.

என்.விஷ்ணு பிரசாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us