PUBLISHED ON : செப் 07, 2018

தேவையானப் பொருட்கள்:
கடலைப் பருப்பு - 100 கிராம்
பயத்தம் பருப்பு - 100 கிராம்
முந்திரி பருப்பு - 150 கிராம்
நெய் - 300 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 6
துருவிய தேங்காய் - 1 கப்
ஜாதிக்காய் - சிறிதளவு.
செய்முறை:
கடலைப் பருப்பையும், பயத்தம் பருப்பையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அத்துடன், முந்திரி, தேங்காய் துருவலையும் சேர்த்து, மை போல அரைத்து எடுக்கவும். அடிகனமான அகலப் பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு, தண்ணீர் ஊற்றி, கம்பி பதம் வரும்வரை காய்ச்சவும். அதில், அரைத்த விழுதை சேர்த்து, கிளறவும்.
இந்த கலவையில், பாதி அளவு நெய்யை, சிறிது சிறிதாக சேர்க்கவும்; இது, கெட்டியானவுடன் பூப்பது போல் வரும். அப்போது, மீதி உள்ள நெய்யை ஊற்றி, ஜாதிக்காய், ஏலக்காயை போட்டு, இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும், துண்டுகளாக்கவும். இப்போது, சுவையான, தில்குஷ் கேக் தயார்! உடல் நலத்துக்கு உகந்தது. குழந்தைகள் விரும்பி உண்பர்.
- ர.வரலட்சுமி, கோவை.
