தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தீபாவளி என்னும் தித்திக்கும் தினம்!

தீபாவளி என்னும் தித்திக்கும் தினம்!

தீபாவளி என்னும் தித்திக்கும் தினம்!


PUBLISHED ON : அக் 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதல் முதல்!

சோழர் காலம் வரை தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில் தான் தீபாவளி முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழா நடந்தது மதுரையில்.

மலரும் - திருஉருவும்

முதன் முதலாக, நாளிதழில் தனியாக தீபாவளி மலர் வெளியிட்ட பழம் பெரும் பத்திரிகை சுதேசமித்திரன். காசியிலுள்ள புராதன சக்தி கோவிலில் மூலவர் தங்கத்தாலான சொர்ண அன்ன பூரணியின் முழு திருஉருவத்தையும் தீபாவளி அன்று மட்டும்தான் தரிசிக்க முடியும். வருடத்தில் மற்ற நாட்களில் சாளரத்தின் மூலம் சொர்ண அன்ன பூரணியின் முகத்தை மட்டும்தான் தரிசிக்க முடியும்.

தீபாவளித் திருநாளில் அன்னபூரணியைத் தரிசித்தால், அந்த வருடம் முழுவதும் உணவுக்குக் கவலை இல்லை என்பது நம்பிக்கை. காசி சென்று அன்னபூரணியைத் தரிசிக்க எல்லாராலும் முடியாது. ஆதலால் ஆதிசங்கரர் இயற்றிய அன்னபூர்ணா அஷ்டகத்தைச் சொல்லி, வீட்டிலேயே அன்னபூரணியை வழிபட்டு வர சகல பாக்கியங்களையும் பெறலாம்.

பட்டாசு பட்டமானது!

தமிழகத்தில் தீபாவளி அன்று சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவர். ஆனால், குஜராத் மாநிலத்தில் தீபாவளி தினத்தன்று யாரும் பட்டாசைப் பற்றி நினைப்ப தில்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை விதவிதமான பட்டங்கள் செய்து வானில் பறக்கவிட்டு மகிழ்வர்.

14 கீரை - விளக்கு!

மேற்கு வங்காளத்தில் தீபாவளி துர்க்கைக்குரிய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. வீடு மற்றும் கடைகளில் மாவிலைத் தோரணம் கட்டி, வாயிலை அலங்கரிப்பர். மாலையில் தீபங்களால் இல்லத்தை அழகுபடுத்துவர். பட்டாசு வெடிப்பர். தீபாவளி அன்று 14 வகை கீரை சமைத்து உண்பது விசேஷம். தீப அலங்காரம் செய்யும்போது வரிசைக்கு 14 விளக்குகளாவது வைக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

மாநிலங்களில்....!

ராமபிரான் இலங்கையில் ராவணனைக் கொன்று அயோத்தி திரும்பியதும் மக்கள் மகிழ்ச்சிப் பெருக்குடன் நகரத்தை அலங்கரித்தனர். ஏராளமான தீபங்கள் ஏற்றினர். அதன் நினைவாகவே வட மாநிலங்களில் தீபமேற்றி தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் காலை நேரத்தில் தீபாவளிக் கொண்டாட்டம் கிடையாது. பகலில் விருந்து உண்டு, இரவில் தீபம் ஏற்றி வீட்டை அழகுபடுத்துவர்.

கர்நாடகத்தில் காலையில் எண்ணெய் ஸ்நானம் உண்டு. இரவில் தீபமேற்றிக் கொண்டாடுவர். தமிழகத்தில் தீபாவளியன்று தீபம் ஏற்றும் பழக்கம் இல்லை. அதற்குப் பதிலாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவர்.

முகாரில் தீபாவளியின் போது பழைய பொருட்களைக் கழித்து, வீட்டைச் சுத்தம் செய்வர். பின் ஒரு துடைப்பத்தைக் கொளுத்தி வீட்டுக்கு வெளியே போடுவர். இவ்வாறு செய்வதால் மூதேவி வெளியேறி வீட்டுக்குள் ஸ்ரீதேவியான லட்சுமி வருவாள் என்பது நம்பிக்கை.

வட மாநிலங்கள் சிலவற்றில் தீபாவளி மூன்று நாட்களும், சிலவற்றில் 5 நாட்களும் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. முதல் நாள் சோட்டா தீபாவளி (சிறு தீபாவளி), இரண்டாம் நாள் படா தீபாவளி (பெரிய தீபாவளி), மூன்றாம் நாள் கோவர்த்தன பூஜை நடத்தப்படும். சில இடங்களில் முதல் நாள் லட்சுமி பூஜை, மறுநாள் நரக சதுர்த்தசி, அதற்கு அடுத்ததாக தீபத் திருநாள், நான்காம் நாள் ஸ்நானம், ஐந்தாம் நாள் எமன் வழிபாடு நடத்தப் படுகிறது.

பல காரணங்கள்!

மகாபலி சக்கரவர்த்தி தீபாவளி அன்று அரியணை ஏறியதாக வாமன புராணம் கூறுகிறது. சந்திர குப்த விக்கிரமாதித்யனும் தீபாவளியன்று அரியணை ஏறினார். ராஜ புத்திரர்கள் தீபாவளி அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி தீபாவளி அன்று அமரரானார். ஆதிசங்கரர் தீபாவளி அன்று ஞானபீடம் நிறுவினார். வங்காளத்தில் தீபாவளியன்று காளி பூஜை செய்கின்றனர்.

ஜைனர்கள் தீபாவளியை மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த நாளாகக் கொண்டாடு கின்றனர். மகாராஷ்டிராவில் தீபாவளியை தாம்பூலம் போடும் திருநாள் என கொண்டாடுகின்றனர்.

ஜப்பானியர்கள் தீபாவளியை மூன்று நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

என்ஜாய் பட்டூஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us