PUBLISHED ON : ஜூன் 17, 2016
மரணம் என்பது நம் வாழ்வில் அற்புதத் தருணம். மரணம் இயற்கையாகவும், எதிர்பாராத விபத்துக்களாலும், நோயாலும் ஏற்படலாம். சென்ற நூற்றாண்டு வரை இதயத்துடிப்பு நின்றுவிட்டால் மரணம் என்று அறியப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய அறிவியல் முன்னேற்றம் ஒரு மனிதன் மரணமடைவது இதயத்துடிப்பு நிற்பதால் அல்ல.
ஏனெனில், செயற்கை சுவாசம் மற்றும் மின் அதிர்ச்சி, நெஞ்சு பகுதியை அழுத்தி விடுதல் ஆகியவற்றால் மீண்டும் இதயத் துடிப்பை ஏற்படுத்தி விடலாம். முழு மரணமென்பது மூளையின் செயல்பாடு முழுவதும் குறைவதுதான், 'மூளைசாவு' எனப்படும். இதுவே, மரணம் எனலாம். இது மாதிரி விபத்தால், தலையில் அடிபடுதல், கோமா போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் மரணமாகும்.
மூளைச்சாவு அடைந்தவர்களின் இதயம் செயல்படலாம். ஆனால், உயிர் பிழைத்து எழ சாத்தியமேயில்லை. இந்நிலை நோயாளி (தழை நிலையுடல்) எனப்படும். இவர்கள் உடலுறுப்புகளை தானம் செய்யலாம். மாரடைப்பு ஏற்படும் போது இதயத் துடிப்பைத் தூண்டிவிடப் பாதிக்கப்பட்டவரின் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்றைச் செலுத்தலாம். இது, 'Kiss of life' எனப்படும்.

