PUBLISHED ON : ஜன 10, 2014

ஆப்பிரிக்காவில் காணப்படும் பான்கேக் ஆமைகளின் ஓடுகள், மற்ற ஆமைகளின் ஓடுகளை விட வலிமையானது அல்ல. ஆமைகளின் ஓடுகள் தட்டையாகவும், லேசாகவும், மென்மையாகவும் பான்கேக்கைப் போல காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறையின் வெடிப்புகளின் உட்புறம் அமர்ந்து கொள்வதால், வேட்டையாளர்களிடமிருந்து தப்பிவிடுகிறது. ஆமைகள் காற்றினை உள்ளிழுத்து தன்னுடைய ஓடுகளை விரிவடையச் செய்து கொண்டு, பாறைகளில் பாதுகாப்பாக இருக்கிறது.
ஆமைகளின் ஓடுகள் பார்க்கக்கூடிய வகையில் தெளிவாக இருப்பதால், ஆமைகள் மூச்சு விடுவதை நன்றாகப் பார்க்க முடிகிறது.
இந்த வகை ஆமைகள் டோர்னியர் ஆமைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த டோர்னியர் ஆமைகள் தெற்கு கனடாவின் தான்சினா பகுதியில் காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறைகளிலும், புதர்கள் நிறைந்த பகுதிகளிலும், மரங்கள் அடர்ந்த புல்வெளிப்பகுதி யிலும் காணப்படுகின்றன. மரங்களை வெட்டும் ஆமைகளை ஒப்பிடும் போது, பான்கேக் ஆமைகள் வேகமாக நகரக் கூடியவை. இந்த ஆமைகள் விழுந்து விட்டாலும் கூட உடனடியாக நகரக் கூடிய தன்மை கொண்டுள்ளது.
