தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தமிழன் என்று சொல்லடா!

தமிழன் என்று சொல்லடா!

தமிழன் என்று சொல்லடா!


PUBLISHED ON : ஜூன் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய காலகட்டத்தில், நம்முடைய மின்சாரத்துறை, ஏகப்பட்ட நஷ்டங்களை சந்தித்து வருவதால், இதன் சுமை, நம் ஒவ்வொருவருடைய தலையில் தான் விழுந்துள்ளது. இந்த பிரச்னைக்கு, ஒரு மிகப்பெரிய, தீர்வை, நம் தமிழ் இளைஞர் ஸ்ரீதர் கண்டுபிடித்துள்ளார் என்பது, எத்தனை பேருக்கு தெரியும்.

இதுவரை, யாருமே செய்திராத, ஒரு அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம், அமெரிக்க வியாபார உலகமே, இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

திருச்சியில் உள்ள, ரீஜினல் இன்ஜினியரிங் கல்லுாரியில், என்.ஐ.டி., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து, அமெரிக்காவில் உள்ள, இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில், நியூக்ளியர் இன்ஜினியரிங் முடித்து, டாக்டர் பட்டம் பெற்றார் ஸ்ரீதர். இவரது புத்தி கூர்மையை வியந்த, 'நாசா' அமைப்பு, உடனடியாக, வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள, 'ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரி'யின் இயக்குனராக நியமித்தது. 'செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா' என்ற ஆராய்ச்சியில் இறங்கிய ஸ்ரீதர், மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால், அமெரிக்க அரசோ திடீரென, அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டி விட்டது.

மனம் தளராத ஸ்ரீதர், அந்த ஆராய்ச்சியை அப்படியே, 'ரிவர்ஸில்' செய்து பார்த்தார். ஏதோ ஒன்றிலிருந்து, ஆக்ஸிஜனை உருவாக்கி, வெளியே எடுப்பதற்குப் பதிலாக, அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால், என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி, அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை, இந்த இயந்திரம் மூலம், தயார் செய்து கொள்ளலாம் என்ற நிலையை, ஸ்ரீதர் உருவாக்கி விட்டார்.

தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது, அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போயினர். ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில், மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில், பெரிய அளவில் பணம் வேண்டும்.

ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர்; அமெரிக்காவில், மிகப்பெரும் வெற்றி கண்ட, நெடிஸ்கேப், அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள், இன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடு தான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க, ஜான் டூயர் துவக்கத்தில் போட்ட முதலீடு, ரூபாய், 2.5 கோடி தான்.

ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை, வர்த்தக ரீதியில் செயல்படுத்த, ஜான் டூயர் போட்ட முதலீடு, ரூபாய் 10 கோடி. இது மிகப் பெரும் தொகை என்றாலும், துணிந்து முதலீடு செய்தார் ஜான்; காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில் நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

பொதுவாக, மின்சாரம் உற்பத்தி செய்யும் போது, சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும்.

அது, நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும், பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தில், குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும்.

இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால், மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி, பல நல்ல விஷயங்கள், ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்து, இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். அவரது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

கிட்டத்தட்ட, எட்டு ஆண்டுகள் போராடியதன் விளைவு, இன்று, 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பெட்டி தயாராகி விட்டது. 10 முதல், 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிக்குள் உருவாகியுள்ள இயந்திரத்துக்குள் ஆக்ஸிஜனையும், இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால், அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார்; சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாம். இந்த பாக்ஸ்களை, கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம்; வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம்.

உலகம் முழுக்க, 250 கோடி மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கின்றனர்; இந்த, 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால், உலகத்தின் எந்த மூலையிலும், மின்சாரம் தயார் செய்யலாம். இந்தியாவில், ஒரு ப்ளூம் பாக்ஸ் இருந்தால், நான்கு முதல், ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்து விடும்.

இன்றைய தேதியில், அமெரிக்காவின், 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சாரம் தயார் செய்கின்றன. இன்னும், ஐந்து ஆண்டுகளில், அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த, 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.

'சாதாரண மனிதர்களும், இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு, இதன் விலை இறங்கும்...' என்கிறார் ஸ்ரீதர்.

'ஒரு காலத்தில், லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர், இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே... அதுபோலத்தான்!' என்கிறார் ஸ்ரீதர்.

தமிழக மின்சார பிரச்சனைக்கு, ஸ்ரீதர் மூலம் தீர்வு வந்தால், மிக மிக நல்லது; நம் மத்திய, மாநில அரசுகள், இவரது தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டால், நம் நாடு ஒளி மயமாகும்.

ஹாட்ஸ் ஆப் ஸ்ரீதர்!

- வசந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us