தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டவுசர் மைதீன்!

டவுசர் மைதீன்!

டவுசர் மைதீன்!


PUBLISHED ON : செப் 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 53 ஆண்டுகளுக்கு முன், தேனி நாடார் சரஸ்வதி உயர்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆண்டு விளையாட்டு போட்டிக்காக, கபடிக் குழு மாணவர்களுக்கு பயற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் உடற்பயிற்சி ஆசிரியர், பாண்டியன்.

அப்போது, விளையாட்டு மைதானத்தில் முண்டாபனியன், அரைக்கால் டவுசருடன் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். காஜா மைதீன் என்ற மாணவன், 'கபடி... கபடி...' என்று சொல்லி ஆடும்போது, எதிர் அணியினர் அவனைப் பிடித்து வேகமாக இழுக்க, 'எலாஸ்டிக் டவுசர்' ஆனதால், உருவி வந்தது. அந்தக் காட்சியைக் கண்டோர் அனைவரும் சிரித்துவிட்டனர்.

'ஏண்டா லூசுப் பயலே ஜட்டி போட வேண்டாமா?' என்று உடற்பயிற்சி ஆசிரியர் அவனைத் திட்டினார்.

அன்று முதல், 'டவுசர் மைதீன்' என்ற பட்டப்பெயர் அவனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வே என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்ச்சி.

- வி.வரதராஜன், எழும்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us