தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ட்ரிங்... ட்ரிங்...

ட்ரிங்... ட்ரிங்...

ட்ரிங்... ட்ரிங்...


PUBLISHED ON : செப் 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான், அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். கடந்த, 37 ஆண்டுகளுக்கு முன், வத்தலகுண்டு, சி.எஸ்.ஐ., ஆசிரியர் பயிற்சி பள்ளி விடுதியில் தங்கி பயின்ற போது நடந்த ஒரு சம்பவம்...

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில், நண்பனின் ஊருக்குச் சென்று, சினிமா பார்த்து விட்டு மறுநாள் ஊருக்குச் செல்லலாம் என்று நானும், என் நண்பனும் திட்டம் தீட்டினோம். அதன்படி, விடுதியில் உள்ள அலாரம் டைம் பீஸ் கடிகாரத்தை திருடி, அதை விற்று சினிமா பார்க்கலாம் என கூறினான் என் நண்பன்.

விடுமுறை விடுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் கடிகாரத்தை திருடி, அருகில் உள்ள தோட்டத்தில் ஒளித்து வைத்தேன். கடிகாரம் காணாமல் போனதால், நானும், என் நண்பனும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் நடித்து, மற்றவர்களுடன் தேடினோம். கடைசியில், 'கடிகாரம் கிடைக்கவில்லை' என்று வார்டனிடம் பொய் சொன்னோம்.

'சரி பரவாயில்லை... நானே ஒரு கடிகாரம் வாங்கித் தருகிறேன்' என்று பெருந்தன்மையுடன் கூறிவிட்டார்.

ஊருக்குச் செல்லும் போது எடுத்துச் செல்லலாம் என்று தோட்டத்தில் ஒளித்து வைத்திருந்த கடிகாரத்தை எடுத்து வந்து, என் அறையில் யாருக்கும் தெரியாமல் வைத்தேன். ஆனால், மறுநாள் அதிகாலையில் திடீரென அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது. சத்தத்தைக் கேட்டு வார்டனும், மாணவர்களும் உடனே என் அறைக்கு வந்துவிட்டனர். நானும், 'கடிகாரத்தை எடுத்து யாரோ திருடி ஒளிந்து வைத்துள்ளனர்' என, சாமர்த்தியமாக பேசி, கடிகாரத்தை வார்டனிடம் கொடுத்தேன்.

சினிமா பார்க்கலாம் என்ற ஆசை நிராசையாகி விட்டது, கடிகாரம் காணாமல் போன நேரத்தில் வார்டன், 'பரவாயில்லை நான் புதிதாக ஒன்று வாங்கித் தருகிறேன்' என்று கூறியது என் மனச்சாட்சியை உறுத்தியதால், விடுமுறை முடிந்து பள்ளி வந்தபின், வார்டனிடம் தனியாக சென்று, நண்பனை காட்டிக் கொடுக்காமல், நான் திருடியதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டேன்.

அவரும் என்னை பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டார். அன்றிலிருந்து, 'பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது' என முடிவு எடுத்து, வாழ்ந்து வருவதுடன், என்னிடம் பயிலும் மாணவர்களிடம் இந்த நிகழ்வை கூறி அவர்களையும் நல்வழிப் படுத்துகிறேன்.

- பி.கருப்பையா, அலங்கா நல்லூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us