தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டைனோசர் போட்ட முட்டை!

டைனோசர் போட்ட முட்டை!

டைனோசர் போட்ட முட்டை!


PUBLISHED ON : நவ 30, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்கரான ராய் சாப்மேன் ஆன்டீரீவ்ஸ் தலைமையிலான குழு 1923ம் வருடம் டைனோசரின் முட்டை படிமங்களை முதன் முதலில் கண்டுபிடித்தது. புரோடோசெராடாப்பின் முட்டை 20 செ.மீட்டர் நீளத்திற்கு கிடைத்தது. அது கிண்ணம் போல இருந்தது. புதை படிவமாக்கப்பட்ட கூட்டில் இருந்த முட்டை படிமன் மணல், பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. இதை போன்றும், இன்ன பிறவும் கிடைத்த டைனோசர்களின் முட்டை புதை படிமங்கள், டைனோசர்கள் இன்றைய கடல் ஆமைகளை போலவே முட்டையிட்டுள்ளன என நம்பினர். சில டைனோசர் கூடுகளில், முட்டைகள் அடுக்குகளாக இருந்தது தெரியவந்தது. பல பெண் டைனோசர்கள் ஒரே இடத்தில் முட்டை இட்டது தெரிய வந்தது. வடமேற்கு அமெரிக்காவில் ஒரு காட்சி படிமன் கிடைத்தது. அங்கே இன்றைய காலத்தில் கடல் பறவைகள் போல டைனோசர்கள் காலனி போல ஓரிடத்தில் முட்டைகள் இட்டு வாழ்ந்தது தெரிந்தது.

டைனோசர் முட்டை எவ்வளவு பெரியது?



யடனோசர் என்பவை மிக பெரியவை. அவற்றில் சில மிக மிக பிரமாண்டமானவை. ஆனால், அவற்றின் முட்டைகள் அவ்வளவு பெரியவையல்ல. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முட்டை படிமங்களில் காணப்பட்ட பெரிய முட்டை என்பது 30 செ.மீ., நீளமே. அது ஹைப்செலோசரஸின் முட்டை என கருதப்படுகிறது. கிட்டத்தட்ட நெருப்பு கோழியின் முட்டையை விட இரு மடங்கு பெரியது. (அருகில் உள்ள பல்வேறு முட்டைகளின் படத்தை காண்க.) ஒரு முட்டை பெரிதாக இருந்தால் அதற்கேற்ப அதன் ஓடும் கடினமாய் இருக்க வேண்டும். இல்லையெனில், தன் கனத்தாலேயே முட்டை உடைந்து விடும். மிகப் பெரிய முட்டை ஓட்டின் கடினம் எத்தகையது என்றால் அதனை உடைத்து கொண்டு டைனோசர் குட்டியால் கூட வெளியேற முடியாது. ஹைப்செலோ சரஸின் முட்டை ஓட்டின் தடிமன் ஒரு செ.மீட்டரில் மூன்றில் ஒரு பங்குதான். ஆனால், அதன் முட்டையோ 30 செ.மீ., நீளம். மயசவ்ரா 20 செ.மீ., நீள முட்டை களை இட்டது. பெரும்பான்மையான மத்திய வடிவமுடைய டைனோசர்கள் ஏறக்குறைய வான்கோழி முட்டை அளவிலான முட்டைகளையே இட்டது.

ஒவிரேப்டர்: இந்த டைனோசரை பற்றி புரோடோசெராடாப்ஸின் கூட்டின் அருகே தெரிய வந்தது. இவை முட்டைகளை விரும்பி உண்ணும்.

புரோடோசெராடாப்ஸ்: இவை தாவர உண்ணிகள். மந்தைகளாக வாழ்ந்து இருக்கலாம். முட்டை, சிறியவை, வளர்ந்தவை ஆகிய அனைத்து படிமங்களும் ஓரிடத்தில் கிடைத்தன.

டைனோசர் முட்டை ஓடு எப்படி இருந்தது?



யடனோசர்களின் முட்டைகள் தோலினாலான நீர்புகா முட்டைகள். இன்று அதே முட்டைகளை போன்று ஊர்வன உயிரினங்கள் இடுகின்றன. ஆனால், டைனோசர்களின் முட்டைகள் பின்னர் முதலை அல்லது பறவை முட்டைகள் போல ஆயின. கோழியின் முட்டை ஓட்டை போலவே பிற்காலத்தில் டைனோசரின் முட்டை ஓட்டில் கால்ஷியம் கார்பனேட் இருந்தது. இந்த ரசாயனம்தான் கடல் ஓடுகளிலும் உள்ளது. சில டைனோசர்கள் பாம்புகள் செய்வது போல முட்டைகள் பொரியும் வரை முட்டைகளை தங்கள் உடம்பிலேயே வைத்திருந்தன. சில கூட்டு படிமன் அருகே புதிதாக பிறந்த குட்டிகளின் எலும்புக்கூடு பொரிக்கப்படாத முட்டைகளின் அருகே கிடந்தது. இன்றைய சிறப்பான எக்ஸ்-ரே தொழில் நுட்பங்களை மருத்துவத் துறையில் இருந்து கடன் வாங்கி, மயசங்ராவின் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்கள் ஒரு முட்டை கூட்டு காலனி அமைப்பு இடத்தில் கிடைத்த புதிதாக பிறந்த குட்டியின் எலும்புக்கூட்டை வைத்து, அது முட்டையில் இருந்தபோது எப்படி இருந்திருக்கும் என்ற வடிவத்தினை உருவாக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us