தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மயங்கிட்டான்!

மயங்கிட்டான்!

மயங்கிட்டான்!


PUBLISHED ON : ஜூன் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 1958ல், ஆறாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு இது!

வகுப்பாசிரியர், மிகவும் கண்டிப்பானவர். வகுப்பு துவங்கிய பின், தாமதமாக வருபவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்.

வகுப்புக்கு வெளியே, மண் தரையில் முட்டி போட வைப்பார். வெயிலில், மண் தரையில் முட்டி போடுவது, மிகுந்த வேதனையாயிருக்கும்.

நான், எங்கள் ஊரிலிருந்து, 3 கி.மீ., துாரம் நடந்து வருவதால், தாமதமாகி விடும்.

இந்த நிலை தொடர்வதால், இதற்கு, முடிவு கட்ட நினைத்து, ஒரு நாள், என்னுடன் சேர்ந்து, முட்டி போட்ட மாணவர்களிடம், 'நான் மயக்கம் வந்தது போல் நடிக்கிறேன்; நீங்க சிரிக்காமல், கூக்குரலிடுங்க...' என்று கூறி, மயங்கி விழுந்தது போல் நடித்தேன். உடனே, மற்றவர்கள், 'மயங்கி விழுந்து விட்டான்...' என கூச்சலிட்டனர்.

தலைமை ஆசிரியர் உட்பட, ஆசிரியர்கள் ஓடி வந்து, என்னை துாக்கிச் சென்று, படுக்க வைத்து, மயக்கம் தெளிய வைத்தனர். குடிக்க டீயும் வந்தது; தலைமை ஆசிரியர் விசிறி விட்டபடியே, ஆறுதல் கூறி, வகுப்பு ஆசிரியரை மிகவும் கண்டித்தார்.

மறுநாளிலிருந்து, எங்களுக்கு முட்டி போடுவதிலிருந்து விமோசனம் கிடைத்தது; இதில், வேடிக்கை என்னவென்றால், என்னுடன் சேர்ந்து முட்டி போட்டவர்கள், என்னைக் காட்டிக் கொடுக்காமல் இருந்ததை, என்னால் மறக்க முடியவில்லை.

- கே.சீனிவாசகம், தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us