தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கண் தெறக்கணும் தாயீ...

கண் தெறக்கணும் தாயீ...

கண் தெறக்கணும் தாயீ...


PUBLISHED ON : ஆக 01, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி, பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளியில், 1954ல், 8ம் வகுப்பு படித்த போது, தலைமை ஆசிரியை ரெஜினா, வகுப்பு ஆசிரியராகவும் இருந்தார். உடன் படித்த அன்னக்கிளி, மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவள்.

பாட புத்தகம் வாங்க காசு இன்றி தவிப்பாள்; அவ்வப்போது வரமாட்டாள். என்னிடம், பேனா, புத்தகம் இரவல் வாங்குவாள். இதனால் ஏளனமாகப் பேசுவேன்.

ஒருநாள், மிகத் தாமதமாக வந்தாள். அணிந்திருந்த உடையை பார்த்து, கிண்டலாக சிரித்தோம். எங்களை அடக்கிய ஆசிரியை, 'ஏன் தாமதம்...' என கேட்டார். உடன் வந்திருந்த அவள் தந்தை, 'சாமி... நான் தெருக்கூட்டுறவனுங்க... துட்டு கிடைக்கும் என்பதால், கரகம் ஆடுறதுக்கு கூட்டி போயிட்டேங்க...' என கும்பிட்டார்.

நிலையை உணர்ந்த ஆசிரியை, 'கரகம் ஆடு பார்க்ககலாம்...' என்றார். கணமும் தயங்காமல், 'காளியம்மா பொங்கலுக்கு ஆத்தா... கரகங்கெட்டி ஆடி வாறோம்; கண்ணு தெறக்க வேணுந் தாயீ...' என, கணீர் குரலில் பாடினார். அதற்கு ஏற்ப, செம்பை தலையில் நிறுத்தி, அபிநயித்து ஆடியவளைக் கண்டு வியந்து கை தட்டினோம்.

அவளை உற்சாகப்படுத்தி, 'எந்த வேலையும் கேவலம் இல்லை...இந்த பயிற்சியால் எதிர்காலத்தில் புகழடைவாய்...' என, கேரளத் தமிழில் வாழ்த்தினார் ஆசிரியை. தவறை உணர்ந்து உதவினோம். பிற்காலத்தில், அன்னக்கிளி கரகாட்டக்குழு மிகவும் புகழ் பெற்றது.

என் வயது, 78; நற்பண்புகளை வளர்க்கும் விதமாக அறிவுரைத்த ஆசிரியையை, வாழ்வின் வழிகட்டியாக எண்ணி தினமும் வணங்குகிறேன்.

- பி.விஜயலட்சுமி, கோவை.

தொடர்புக்கு: 94422 69941

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us