தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/போலி விரதம்!

போலி விரதம்!

போலி விரதம்!


PUBLISHED ON : மார் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடர்ந்த காடு ஒன்றின் நடுவில் குகை ஒன்று இருந்தது. அதில், ஓநாய் வாழ்ந்து வந்தது. அது மிகவும் சுயநலம் கொண்டது.

ஒருநாள் -

காட்டில், திடீரென புயல் வீசியது; கடுமையான மழை பெய்தது; காடே தண்ணீரால் சூழ்ந்தது. அந்த தண்ணீர் குகையையும் சூழ்ந்து கொண்டது. ஓநாய் அங்கிருந்து தப்பி, அருகில் உள்ள மலை ஒன்றில் மேல் ஏறிக் கொண்டது. மலையிலிருந்து ஓநாயால் இறங்க முடியாதபடி வெள்ளம் சூழ்ந்து நின்றது.

இரை தேட முடியாமல், மிகவும் தத்தளித்தது ஓநாய். பசியும், தாகமும் வயிற்றை கிள்ளின.

இப்படியே இந்த பசியினாலும், தாகத்தினாலும் உயிரை விடுவதை விட, இறைவனை நினைத்து விரதமாக மாற்றி விடுவது மேல் அல்லவா என்று எண்ணிய ஓநாய், அமைதியாக கண் மூடி, தியானத்தில் அமர்ந்தது.

அப்போது, அந்த காட்டில் வாழ்ந்து வந்த வனதேவதை ஒன்று, ஓநாயை பரீட்சை செய்ய எண்ணியது. உடனே, அது அழகான ஒரு வெள்ளாடாக உருமாறி, ஓநாயின் கண் எதிரிலே சென்றது.

இதை திடீரென பார்த்த ஓநாய், 'ஆஹா, என்ன ஆச்சர்யம்... என் உபவாசத்தையும், இறைவழிபாட்டையும் மனதில் கொண்ட இறைவன் தான், இந்த வெள்ளாட்டை என்னருகே அனுப்பி வைத்திருக்கிறான்.

'விரதத்தையும், உபவாசத்தையும் நாளை வரை ஒத்திப் போட்டு கொள்ளலாம். ஆனால், வெள்ளாடு நாளைக்கு கிடைக்குமா என்பது நிச்சயமில்லை. எனவே, இப்போதே என் விரதத்தை ஒத்தி வைக்கிறேன். இப்போது நான் இந்த வெள்ளாட்டை சாப்பிட்டு விடுகிறேன்' என்று சொல்லி அதன் மேல் பாய்ந்தது.

உடனே, வெள்ளாடு வனதேவதையாக மாறி ஓநாயை பார்த்து, “நீ இருக்கும் விரதம் உண்மையானதா, போலியானதா என்பதை கண்டறியவே நான் வெள்ளாடு வடிவில் வந்து சோதனை செய்தேன். உன்னுடைய விரதம் வெறும் போலி வேடம் என்பதையும் கண்டு கொண்டேன்.

''உன்னை போன்ற நிலையற்ற மனதை பெற்றவர்கள், 1,000 ஆண்டுகள் தவமிருந்தாலும் சரி, ௧௦ ஆயிரம் ஆண்டுகள் உபவாசம் இருந்தாலும் சரி, கடவுளின் அனுக்கிரகம் கிடைக்காது” என்று கூறி மறைந்தது.

அப்போது தான், தான் செய்த தவறை உணர்ந்தது ஓநாய்.

போலி வேஷம் ஒருநாள் கலைந்து விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us