PUBLISHED ON : நவ 02, 2012

தூங்கும் போது நம் உடலுக்கு சக்தி தேவையா? இந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளலாமா பட்டூஸ்!
நம்மில் பெரும்பாலானோர் தூங்கும் போது நம் உடல் சலனமில்லாமல் இருக்கிறது என்று மேலோட்டமாக பார்த்து நினைப்போம். அதனால், சக்தி தேவையா? என்று கூட யோசிப்போம். ஆனால், அப்படி யோசிப்பது தவறு.
ஏனென்றால், நாம் தூங்கும்போதும் நம் உடல் உறுப்புகள் பல வேலைகளை செய்து கொண்டு தான் இருக்கின்றன. காற்றை உள்ளுக்குள் இழுத்து, வெளியில் விடுகிறோம். இதயம் துடித்து கொண்டிருக்கிறது.
ரத்த ஓட்டம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கும். படுப்பதற்கு முன் சாப்பிட்ட உணவை வயிறு ஜீரணமாக்கும் காரியத்தை செய்து கொண்டிருக்கும்.
சிறுநீரகம், பெருங்குடல் ஆகியவை கழிவுகளை அப்புறப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கும். எனவே, இதற்கெல்லாம் சக்தி தேவைதான். ஆனால், நடக்கும் போது, ஓடும் போது, உட்காரும் போது தேவைப்படும் சக்தியை விட, தூங்கும் போது குறைவான அளவு சக்தி தேவைப்படுகிறது.
