தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : பிப் 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்கோடு என்றால் என்ன?

பார் கோடுகள் வெவ்வேறு அளவுகளில் உள்ள கருப்புக் கோடுகள் ஆகும். இவை பல்வேறு இடைவெளியுடன் தொடராக அமைந்து இருக்கும். தற்போது, பிஸ்கெட் பாக்கெட் முதல், புத்தகங்கள் வரையில் பல்வேறு வகையான பொருட்களில் இந்த பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்கோடுகளுக்கு இடையே உள்ள வெள்ளைப் பகுதியை, ஸ்கேனர் கருவி எண்களாகக் கணக்கிட்டு கொள்கிறது. இதை வைத்து கம்ப்யூட்டர் மூலம் பொருள் மற்றும் அதன் விலையை அறிய முடியும். தற்போது உள்ள லேசர் ஸ்கேனர் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் பிரிண்டர்கள் பில்லை பிரிண்ட் செய்து விடுகின்றன.

கண்களைக் கட்டிக் கொண்டு வித்தை காட்டுகிறார்களே... இது சாத்தியமா?

கண்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சிகையலங்காரம் செய்வது, மேஜிக் செய்வது என எத்தனையோபேர் வித்தைகளைச் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.

''நோஸ் பீக்'' என்ற தந்திரம் இவர்களுக்குத் தெரியும். கண்களைச் சேதப்படுத்தாமல், எத்தனை இறுக்கமாகக் கட்டினாலும், மூக்கின் இரண்டு பக்கங்களிலும் கீழ்ப்புறம் இரு சின்ன இடைவெளி வழியே வெளிச்சம் தெரிவதைத் தவிர்க்கவே முடியாது. இந்த இடைவெளியை, நெற்றியைச் சுருக்கி, அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என திரும்பி வித்தை காட்டுபவர்கள் சாமர்த்தியமாக பெரிது பண்ணிக் கொள்வர். தோள் பட்டை வரை மூடிக்கொண்டு அதே வித்தையைச் செய்யச் சொன்னால் இவர்களால் முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us