PUBLISHED ON : ஜன 02, 2015

அ நிறம் | அளவு
மேஜிக் காட்டுவோர் மந்திரக் கோல் வைத்திருப்பது ஏன்?
மேடையிலே மேஜிக் காட்டுகிறவர் கையிலே தொப்பி, மந்திரக்கோல், ஜாலம் காட்டும் துணிகளை எல்லாம் வைத்து, மந்திரங்களால் தங்கள் தந்திரங்கள் எல்லாம் நடக்கின்றன என நாம் நம்ப வேண்டும் என்பதற்காகவே, அவர்கள் பாம்பாட்டி மகுடி ஊதி பாம்பைப் பிடிப்பது போல, நம்மை நம்ப வைப்பதற்கு இவைகளை ஆட்டிக் காட்டி, கைகளால் ஜாலவித்தை காட்டு கின்றனர்.
மேடை மேஜிக்கை, நம்மை எல்லாம் மகிழ வைக்கவே நடத்திக் காட்டுகின்றனர். அவர்கள் தங்களின் கைத்திறமையின் சாகசத்தால், பொருட் களை நகர்த்திக் காட்டுவது நமக்குத் தெரியக்கூடாது. அவை எல்லாம் மந்திரத்தால் தான் நடக்கின்றன என நாம் நம்ப வேண்டும் என்பதற்காகவே இந்த மந்திரக்கோல், தொப்பி, துணி எல்லா வற்றையும் காட்டுகின்றனர்.
