PUBLISHED ON : ஜூன் 08, 2018

அ நிறம் | அளவு
மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தும் பாகற்காய்!
கசப்புக்கு எடுத்துக்காட்டாக, பாகற்காயைத் தான் சொல்வர்.
பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் உண்டானால், புற்றுநோய் அணுக்களைக் கொல்லும் சக்தி பாகாற்காய்க்கு இருப்பதாக, சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில், உப்புச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன.
இந்தியாவில் கடந்த, 1982ல் இருந்ததை விட, 2005ல் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது; இன்னும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
பாகற்காய்க்கு, புற்றுநோயைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல், புற்றுநோயை தடுக்கும் சக்தியும் உள்ளது.
வாரத்திற்கு ஒருமுறை, பாகற்காய் சமைத்து உண்டால் போதும்; உடல் நலத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
