PUBLISHED ON : ஜூன் 12, 2015

அ நிறம் | அளவு
இரண்டு பேப்பர் கப், பாத்திரத்தைத் தாங்கும் இடுக்கி, தண்ணீர், மெழுகுவர்த்தி அல்லது கேஸ் அடுப்பு, முட்டை.
செய்முறை: முதலில் ஒரு பேப்பர் கப்பை மெழுகுவர்த்தி சுடரில் காட்டுங்கள். பேப்பர் கப் எரிந்து விடும். பிறகு, மற்றொரு பேப்பர் கப்பில் நீர் ஊற்றி இடுக்கியில் பிடித்து மெழுகுவர்த்தி சுடரில் காட்டுங்கள். இப்போது நீங்கள் எதிர்பார்த்தபடி பேப்பர் எரியாது. இது எப்படிச் சாத்தியம் என்று வியப்பாக இருக்கிறதா? இதுதான் மேஜிக்.
கப்பின் உள்ளே உள்ள நீர் கப்பை எரியாதவாறு காக்கிறது. இது பார்ப்பவர்களுக்கு வியப்பாக இருக்கும். மேலும் வியப்பை உண்டாக்கும். அந்த பேப்பர் கப்பில் உள்ள நீரில், ஒரு முட்டையை போட்டு கேஸ் அடுப்பில் வேக வைத்தும் காட்டலாம். ஆனால், இந்த மேஜிக்கை பெரியவர்களின் உதவியோடுதான் செய்ய வேண்டும் குட்டீஸ்!
