PUBLISHED ON : ஜூன் 24, 2011

'லிப்ட்' என்கிற சாதனம் மட்டும் கண்டுப்பிடிக்கப்படாமலிருந்தால் பலமாடிக் கட்டடங்களை நாம் பார்க்கவே முடியாது. உயரமான மாடிகளுக்குச் செல்ல கிறிஸ்து காலத்திற்கு முந்தியே சில எந்திர ஏற்பாடுகள் இருந்தாலும், இப்போது புழக்கத்திலுள்ள லிப்டின் மாதிரி வடிவம் 1852-ஆம் ஆண்டில்தான் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கியவர் எலீஷா கிரேல்ஸ் ஓட்ஸ் என்பவர்.
இவர் உருவாக்கிய முதல் லிப்ட் நியூயார்க் நகரின் கிரிஸ்டல் பேலஸில் தான் பொருத்தப்பட்டது. பாதுகாப்பான இந்த ஆள் தூக்கி அமைப்பின் பயனை உணர்ந்த பல மாடிக் கட்டட லாட்ஜ் சொந்தக்காரர்கள் தங்கள் லாட்ஜ்களில் இதைப் பொருத்த ஆரம்பித்தனர். லிப்ட் வருவதற்கு முன்னர், தங்கும் உயரத்தைப் பொறுத்து வாடகையும் குறைவதுண்டு.
லிப்ட் வந்த பிறகு அது மறைந்துவிட்டது. ஹெல்த் கிளப், வீடியோ சாலை இருப்பதை லாட்ஜ்காரர்கள் எப்படி விளம்பரப்படுத்துகிறார்களோ, அது மாதிரி லிப்ட் வசதி இருப்பதை பெருமையுடன் விளம்பரப்படுத்தினர். இங்கிலாந்தின் ஏழாவது எட்வர்ட் சக்கரவர்த்தி நியூயார்க் சென்றபோது லிப்டை வேடிக்கை பார்ப்பதும், அதில் ஏறி இறங்குவதும் அவருடைய நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருந்ததுன்னா பார்த்துக்கோங்களேன்.
ஓட்ஸீக்குப் போட்டியாக டப்ஸட்ஸ், சைரஸ் பால்டுவின் என்பவர்களும் லிப்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்து சீக்கிரமே போண்டியாக, ஓட்ஸ் மட்டும் மார்க்கெட்டில் நிலைபெற்றார்.
