PUBLISHED ON : அக் 24, 2014

இந்த விளையாட்டு, விளையாடுபவர் களின் கவனம் செலுத்தும் திறனையும், விழிப்பையும் அதிகரிக்கிறது. விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்பாக, நடத்துபவர் ஏ-4 அளவு ஷீட்டுகளை அதிகமாகக் கொண்டிருக்க வேண்டும்.
விளையாடுபவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு பென்சிலும் ஏ-4 அளவு ஷீட்டும் கொடுக்கப்பட வேண்டும். விளையாடுபவர்கள் உட்கார்ந்து விளையாட வேண்டும்.
விளையாட்டு ஆரம்பித்ததும், விளையாடு பவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஷீட்டை, ஒரேயொரு கையைப் பயன்படுத்தி ஐந்து தடவைகள் மடிக்க வேண்டும். ஷீட்டின் ஏதாவதொரு இடத்தில் ஏ-இசட் (26 எழுத்துக் கள்) எழுத வேண்டும்.
இதற்காகக் கொடுக்கப்படும் நேரம் இரண்டு நிமிடங்கள்.
இரண்டு நிமிடங்களில் இதை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவர். இதே செயல் மீண்டும் செய்யப் பட வேண்டும். ஆனால், நேர வரம்பு ஒரு நிமிடம் மற்றும் முப்பது விநாடிகளாகக் குறைக்கப்படும்.
நடத்துபவர் அடுத்து வரும் சுற்றுக்களுக்கு நேர வரம்பைக் குறைக்கலாம்.
இறுதிவரை தொடர்ந்து விளையாடுபவர் வெற்றி பெற்றவராவார்.
