PUBLISHED ON : ஜூன் 17, 2011

இயற்கையிலேயே மனிதர்கள், வேட்டைக்காரர்கள். நமது சரித்திரத்திற்கு முந்தைய காலத்து மூதாதையர்கள் தம் வயிற்றுப்பாட்டிற்கு பெரிதும் நம்பியது காட்டிலிருந்த பெரும் உணவைத்தான். இன்றும் உலகின் சில பகுதிகளில், அப்படித்தான் இருக்கிறது.
நாம் எங்கு வாழ்கிறோம் என்றாலும் நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதி காட்டு உயிரினங்களில் இருந்தும் கிடைக்கிறது. கடல், ஒரு கணக்கிற்கு சொல்வதென்றால் ஆயிரக்கணக்கான டன்களில் மனிதனின் ஒரு நாள் உணவு தேவைக்கு வழங்குகிறது. பல சுவையுள்ள தாவரங்கள் காட்டு பகுதியில் இருந்துதான் வருகிறது. நாட்டு பகுதியில் எல்லா வகை தாவரங்களையும் விளைவித்தாலும் 'பிரேசில் பருப்பு' போன்ற பல தாவரங்கள் இன்றும் காட்டில் இருந்துதான் கிடைக்கிறது.
மீன் உணவு
மனிதனின் உணவு தேவையை பெருமளவு சரி செய்யும் உணவு மீன். வர்த்தக தேவைக்காக வலை வீசியோ, பெரிய கப்பல்களை நிறுத்தி, வலை வீசியோ, மீன்கள் பிடிக்கப் படுகின்றன. கடலின் அடியில் வசிக்கும், 'காட்' மற்றும் 'ஹேடாக்' போன்ற பெரிய வகை மீன்கள் கூம்பு வடிவ வலைகளில் பிடிக்கப்படுகிறது. பெரிய வலை கொண்டு கடலில் மீன் பிடிக்கும் படகுகளில் இருந்து இந்த செயல் நடைபெறுகிறது. திறந்த வெளி மீன் என்று சொல்லப்படுகிற கடல் தண்ணீரின் மேலே கிடைக்கும் மீன் வகையானது, திரை போன்ற காற்று அல்லது நீரின் ஒட்டத்திற்கு ஏற்ப அசையும் வலைகளால் பிடிக்கப்படுகிறது.
மீன் வர்த்தகம்!
உலகின் மக்கள் தொகையில், மீன் மூலம் வருமானம் பெறும் மக்கள் கணிசமான சதவீதம் உண்டு.
வேட்டையாடு விளையாடு!
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வேட்டையில் ஈடுபடும் மனிதர்கள், அதனை ஒரு விளையாட்டாக பார்க்கின்றனர். மான், முயல், வாலுடைய பெரிய பறவை, மற்றும் காட்டு பன்றி ஆகியவை ஐரோப்பாவின் உணவு வகைகளில் ஒரு சேர்க்கை பொருளாகும். காட்டு பன்றியின் சுவைக்கு மயங்கிய ஐரோப்பியர்கள் அதை பண்ணைகளில் வளர்க்க தொடங்கிவிட்டனர். இதோ ஒரு வாத்து வேட்டைக்காரர் தன் ஒரு நாள் வேட்டையை காட்டுகிறார்.
40 ஒன்றான கதை!
'˜மப்பிள் ரசம்.' இது சர்க்கரை தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இத்தாவரம் வட அமெரிக்காவில் வளர்கிறது. மேப்பிள் ரசத்தை உருவாக்க சர்க்ரை தாவர சாறு நீர், சுண்டும் வரை காய்ச்சப்படுகிறது. 40 லிட்டர் தாவர சாற்றிலிருந்து 1 லிட்டர் 'மேப்பிள் ரசம்' பெறப்படும்.
காட்டின் அறுவடை!
மிதமான வெப்பநிலை நிலவும் உலகின் பகுதிகளில் ஏராளமாக விளையும் இலையுதிர்காலத்தில் விலங்குகள் குளிர்காலத்தை சமாளிக்க உணவை பத்திரப்படுத்தி கொள்ளும். இந்த இயற்கையின் அபரிமிதமான வளர்ச்சியை மனிதர்கள் தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திகொள்கின்றனர்.
மனிதர்கள் பழங்கள் மற்றும் பாசியை உணவுக்காக பயன்படுத்தி கொள்வர். ஐரோப்பா, பிராபிள் உள்ளிட்ட காட்டு தாவரங்களின் கருப்பு பழங்கள் பறிக்கப்படுகின்றன. வேறு வகை பழங்களும் விதவிதமான பயன்பாட்டுக்காக அறுவடை செய்யப்படுகின்றன. அவை ஜாம் மற்றும் பலவித பானங்களில் சேர்க்கப்படுகின்றன. புத்தம் புதிதாய் பறிக்கப்பட்ட 'மோரல்' போன்ற காட்டு பாசி அதன் சுவைக்காக மிக அதிக விலையில் விற்கப்படுகிறது.
கடலின் கனிகள்!
கடலில் இருந்து கிடைக்கும் உணவுகளில் மீனும் ஒன்று. அவற்றை போல சிப்பிகளும் சிறந்த உணவாகும். இரு சிப்பி, நத்தை, நண்டு, போன்றவை, மற்றும் பல வகை சிப்பிகள் மற்றும் மீன்கள் ஆகியன திறந்த வெளி தண்ணீரிலிருந்து வலை, பானை போன்றவைகளை பயன்படுத்தி பிடிக்கப்படுகிறது.
ஜப்பானில், பலவகையான கடற்பாசிகள் உணவிற்காக எடுக்கப்படுகிறது. பதப்படுத்திய உணவாக பாசி, ஜெல்லி ஆகியவை உண்ணப்படுகிறது. ஜெல்லி, காராகீன் என்னும் சிவப்பு பாசியிலிருந்து கிடைக்கிறது. இது வடக்கு அட்லாண்டிக் பகுதிகளிலிருந்து அறுவடை செய்யப்படுகிறது.
கேள்வி - பதில்!
கேள்வி: இத்தாலியின் 'ட்ரைபோலாவ்' வேட்டையாடப்படுகிறது?
பதில்: 'ட்ரபல்'. இதுதான் உலகின் பிரபலமான மற்றும் அதிக விலையுயர்ந்த காட்டு பாசி. இந்த பாசி, மரங்களில் ஒட்டுண்ணியாக வளரும். 'ட்ரபல்' என்பது 'ட்ரைபோலாவ்' மரத்தின் பழமாகும். இவை பூமிக்கடியே, கண்ணுக்கு புலப்படாமல் வளரும். அதனால், இதனை பறிப்பது கடினம். அதற்காக இதிலிருந்து வரும் நறுமணத்தை நுகர, நாய்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதன் பன்றிகளை பயன்படுத்தினான்.
புதர் மாமிச வியாபாரம்!
ஆப்பரிக்காவின் பல பகுதிகளில் பெரிய அளவில் காட்டு விலங்குகள் நகர மார்க்கெட்களில் விற்பதற்காக கொல்லப்படுகின்றன. இந்த மாமிச மார்க்கெட் வியாபாரம் விலங்கு நல ஆய்வலர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. வேட்டைக்காரர்கள் ஒரு காலத்தில் பொழுதுபோக்கிற்காக விலங்குகளை வேட்டையாடியது போய், இன்று விலங்ககளின் மாமிசத்திற்கு ஏற்பட்டுள்ள டிமாண்டை பார்த்து, லாபத்திற்காக தாங்களும் வேட்டையாட தொடங்கிவிட்டனர். இந்த வேட்டைக்காரர்களின் பேராசையில் அழிவின் பாதையில் இருக்கும் விலங்குகளான சிம்பன்சி மற்றும் மேற்கு கொரில்லா வகைகளை வேட்டையாடுகின்றனர். ஒரு ஆப்பரிக்கர், தான் வேட்டையாடிய குரங்குடன் போகிறார்.
