PUBLISHED ON : ஜூலை 06, 2012

இப்போது விதவிதமான குடைகள் வருகின்றன. மழையில் நனைந்துவிடாமல் இருப்பதற்கும், வெயிலில் வாடாமல் இருப்பதற்கும் குடை பெரிதும் உதவுகிறது. மழைக்காலத்தில் பயன் படுத்துவதற்காகவே குடை கண்டுபிடிக்கப்பட்டது என்று நாம் நினைத்திருப்போம் அல்லவா பட்டூஸ். ஆனால், அது உண்மையல்ல. வெயிலுக்காகத்தான் குடை கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பற்றி பார்ப்போமா பட்டூஸ். குடைக்கு ஆங்கிலத்தில் 'அம்ப்ரல்லா' என்று பெயர். அதில், 'அம்ப்ரா' என்ற சொல் லத்தீன் மொழியை சார்ந்தது. இதற்கு 'நிழல்' என்று பொருள். இதில் இருந்து குடை வெயிலுக்காகத்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று உறுதியாகிறது. காகிதத்தால் தயாரிக்கப்பட்ட குடைகளே முதலில் பயன்படுத்தப் பட்டது. பின் சீனர்கள் மெழுகு மற்றும் அரக்கு எண்ணெயை உபயோகித்து, தண்ணீர் பட்டாலும், கெடாமல் பாதுகாக்கும் முறையை கண்டு பிடித்தனர். ஆனால், நம் இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே ஓலைக் குடைகளை உபயோகிக்கின்றனர். மேலும், பெண்களுக் காகதான் முதலில் குடை கண்டுபிடிக்கப்பட்டது. பிறகுதான் ஆண்கள் பயன்படுத்தும் குடைகள் தயாரிக்கப்பட்டன.
லேடீஸ் பர்ஸ்ட்!
