தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பரிசு!

பரிசு!

பரிசு!


PUBLISHED ON : அக் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புமலை கிராமத்தில், ஏழை விவசாயி ஒருவன் இருந்தான்; பக்கத்து வீட்டில், வசித்தவன் வேட்டைக்காரன். அவனிடம், சில வேட்டை நாய்கள் இருந்தன.

அவை, வேலி தாண்டி குதித்து, விவசாயியின் ஆடுகளை கடித்து குதறி வந்தன.

அவதிப்பட்ட விவசாயி, நாய்களை கட்டி வைக்குமாறு கூறினான்; அதை, காதிலேயே போட்டுக் கொள்ளாமல், 'ஆடுகளை துரத்துவது, கடிப்பதெல்லாம் நாய்களின் இயல்பு; நான் எதுவும் செய்வதற்கெல்லை...' என்று எள்ளலாக சொன்னான் வேட்டைகாரன்.

இதை தீர்க்கும் வகையில், அந்த ஊர் முதியவரிடம், அறிவுரை கேட்டான் விவசாயி.

பிரச்னையை ஆழமாக சிந்தித்த முதியவர், 'உன்னால், பஞ்சாயத்தில் புகார் செய்து, வேட்டைக்காரனுக்கு தண்டனை பெற்று தர முடியும். அப்படி செய்தால், நிரந்தர பகையாளி ஆகி விடுவான். நீ சொந்த வீட்டில் இருப்பதால், அண்டை வீட்டுக்காரனிடம் பகை வளர்ப்பது, அறிவுடைய செயல் அல்ல...' என்று, கூறி ஒரு வழிமுறையை வகுத்து கொடுத்தார்.

மறுநாள் -

விவசாயி, தன்னிடம் இருந்த அழகான ஆட்டுக் குட்டிகள், இரண்டுடன், பக்கத்து வீட்டுக்கு சென்றான்; வேட்டைக்காரனின், இரு மகன்களுக்கும் அவற்றை பரிசளித்தான். அந்த சிறுவர்கள், புதிய வரவான ஆட்டுக் குட்டிகளுடன், ஆர்வமாய் விளையாடினர். அவற்றை கண் போல் போற்றினர்.

மகன்களுக்கு விருப்பமான ஆட்டுக்குட்டிகளை பாதுகாக்க, நாயைக் கட்டி வைத்தான் வேட்டைக்காரன். அதுமட்டுமல்ல... வேட்டையில் கிடைத்த அரிய உணவை, விவசாயிக்கு பரிசாக அளித்தான்.

நாளடைவில், இரு குடும்பத்தினரும் நெருங்கிப் பழகினர். ஆடுகளும் பாதுகாப்பாக இருந்தன; அன்பும் வளர்ந்தது.

குட்டீஸ்... வீணாக எதிரிகளை சம்பாதிக்க கூடாது; எந்த முடிவையும் நிதானமாக சிந்தித்து எடுக்க வேண்டும். மன அமைதி முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us