
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 100 கிராம்
துருவிய தேங்காய் - 1 கப்
பூண்டு - 1
வத்தல் - 3
கடுகு, மல்லி, பெருங்காயம், உப்பு, புளி - தேவையான அளவு
நல்லெண்ணெய், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
சுத்தம் செய்த இஞ்சியை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். நல்லெண்ணெய்யை சூடாக்கி, கடுகு, பெருங்காயம் பொடி, மல்லி, வத்தல் போட்டு வதக்கவும். பின், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பூண்டு, தேங்காய் சேர்த்து, பொன் நிறமாக வதக்கவும்.
இந்த கலவை ஆறியதும், உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். சுவைமிக்க, 'இஞ்சி துவையல்' தயார். மோர் சாதத்துடன் தொட்டு சாப்பிடலாம். வாயு தொல்லை, வாந்தி, வயிறு உப்புசம் தீர்க்கும்.
- சுதா மகேஷ், சென்னை.
தொடர்புக்கு: 88709 99330

