தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மினுக் மினுக் நட்சத்திரம்!

மினுக் மினுக் நட்சத்திரம்!

மினுக் மினுக் நட்சத்திரம்!


PUBLISHED ON : ஜூலை 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா குட்டீஸ்... நட்சத்திரம் தான் சூரியனை விட அதிக அளவு வெப்பமும் ஒளியும் வாய்ந்தது. ஆச்சரியமா இருக்கா?

இது அளவுக்கு அதிகமான வெப்பத்தைக் கொண்ட உருண்டையான பந்தைப் போன்ற வாயு மண்டலம். இது தன்னிடமுள்ள இயற்கையான ஒளி வெப்பம் காரணமாகவே ஒளிர்கிறது. நட்சத்திரம் வேறு எந்த கிரகத்தின் ஒளியையும் பிரதிபலிப்பதில்லை.

சந்திரனைப் போன்ற கிரகங்கள் சூரியனிடமிருந்து ஒளியினைப் பெற்று பிரதிபலிக்கின்றன. நட்சத்திரம் அதிக அளவு வெப்பமுள்ளது என்றால் அது, 'மினுக் மினுக்' கென்று ஒளிர்வதேன்னுதானே கேட்கிறீங்க...

காரணம், நட்சத்திரம் பூமியிருந்து வெகுதொலைவில் இருப்பதுதான். வானத்தில் காற்று சமநிலையில் வீசாமல் அவ்வப்போது மாறுபட்ட நிலையில் வேகமாக வீசுவதால், நட்சத்திரத்தின் ஒளி ஒரே நேர் கோட்டில் அமையாமல் பல வளைவுற்று வருகிறது. அதனால் தான் பூமியிலிருந்து பார்க்கின்ற போது நட்சத்திரம் “மினுக் மினுக் கென்று' மின்னுவது போல் தெரிகின்றது.

சூரியனும் ஒரு நட்சத்திரமே. இது மிகவும் பெரியதோ பிரகாசமான நட்சத்திரமோ அன்று. வானத்திலுள்ள மற்ற நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது, சூரியன் நடுத்தரமான அளவும் , ஒளியும் வாய்ந்ததாய் இருக்கிறது. பல நட்சத்திரங்கள் சூரியனைவிடச் சிறியனவாய் இருந்தாலும், வேறு சில நட்சத்திரங்கள் சூரியனைக் காட்டிலும் நூறு மடங்கு பெரியனவாய் இருக்கின்றன.

இவ்வளவு பெரியனவாய் இருந்தும், நம் கண்ணிற்குச் சிறியனவாய்த் தெரிவதற்குக் காரணம் முன்பே கூறியது போல் அவை பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருப்பதேயாகும்.

பழங்காலக் கிரேக்க நாட்டு வானிலை ஆய்வாளர்கள், நட்சத்திரத்தினை இதன் ஒளிர்கின்ற தன்மையைக் கொண்டும் பருமனைக் கொண்டும் பல வகைகளாகப் பிரித்திருந்தனர். நட்சத்திரத்தின் நிறத்தினைக் கொண்டும், அது வெளிப்படுத்தும் ஒளியினைக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரித்திருந்தனர். நட்சத்திரத்தின் வெப்பநிலை, இரசாயன மாற்றம் ஆகியவற்றையும் ஆய்ந்து பல கருத்துகளை வெளியிட்டனர். நட்சத்திரம் தன் சொந்த வெப்பத்தினாலேயே ஒளிர்கின்றது என்பது அவர்களின் முடிவான கருத்து.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us