PUBLISHED ON : செப் 11, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
அரிநெல்லிக்காய் - 10
சாதம் - 3 கப்
காய்ந்த மிளகாய் - 3
உளுந்தம் பருப்பு, கடுகு, நல்லெண்ணெய், கருவேப்பிலை - சிறிதளவு
வெல்லம், உப்பு, மஞ்சள் துாள் - தேவையான அளவு.
செய்முறை:
அரிநெல்லிக்காயை வேக வைத்து ஆறியதும், சாதத்துடன் கலக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின், உப்பு, மஞ்சள் துாள், வெல்லத்துடன், நெல்லிக்காய் சாதத்தை கலக்கவும்.
சுவை மிக்க, 'அரிநெல்லிக்காய் சாதம்!' தயார். தொட்டுக்கொள்ள வெங்காய ரைத்தா உடன் பரிமாறலாம்.
- சுந்தரி காந்தி, சென்னை.
தொடர்புக்கு: 70102 88530

